மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

இந்தியப் பங்குகள் பரிவர்த்தனை வாரியத்திற்கும் மங்கோலியாவின் நிதி ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் இடையே கையெழுத்திட உத்தேசித்திருக்கும் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 08 APR 2022 3:53PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை இந்தியப் பங்குகள் பரிவர்த்தனை வாரியத்திற்கும் மங்கோலியாவின் நிதி ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் (எஃப்ஆர்சி) இடையே கையெழுத்திட உத்தேசித்திருக்கும் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

பங்குகள் ஆணையங்களின் பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கான சர்வதேச அமைப்பின் இணை கையெழுத்தாளராக செபி போன்று எஃப்ஆர்சி-யும் உள்ளது.  இருப்பினும் இந்த அமைப்பு தொழி்ல்நுட்ப உதவிகளை வழங்குவதற்கான வாய்ப்பில்லை. தற்போதைய உத்தேச இருதரப்பு  பரிந்துணர்வு ஒப்பந்தம்  பங்குச்சந்தைகள் தொடர்பான  சட்டங்களை தீவிரவமாக அமல்படுத்துவதற்கு தேவையான தகவல்களை பகிர்வதற்கான பங்களிப்பை வலுப்படுத்தும்.  மேலும், தொழில்நுட்ப உதவித் திட்டத்தை உருவாக்கவும் உதவி செய்யும்.  மூலதனச் சந்தை, திறன் கட்டமைப்புச் செயல்பாடுகள், ஊழியர்களுக்கான பயிற்சித் திட்டங்கள்போன்றவை தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிக்க  தொழில்நுட்ப உதவித்திட்டம்  பயன்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கி்ல செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814819

----


(Release ID: 1814852) Visitor Counter : 196