நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

மாநில எரிசக்தி மற்றும் பருவநிலை குறியீட்டை 11-ந் தேதி நித்தி ஆயோக் வெளியிடுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 08 APR 2022 12:50PM by PIB Chennai

மாநில எரிசக்தி மற்றும் பருவநிலை குறியீட்டை  வரும் 11-ந் தேதி நித்தி ஆயோக் வெளியிடுகிறது.

நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.சரஸ்வத், தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த், பல்வேறு அரசு துறைகளின் செயலாளர்கள், எரிசக்தித் துறை சம்பந்தப்பட்டவர்கள் முன்னிலையில் நித்தி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் இந்தக் குறியீட்டை வெளியிட உள்ளார்.

மாநில எரிசக்தி மற்றும் பருவநிலை குறியீடு (எஸ்சிஐ) சுற்று-1, 6 அளவுகோல்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தரவரிசையை நோக்கமாக கொண்டுள்ளது. (1) விநியோக நிறுவனங்களின் செயல்திறன் (2) எரிசக்தி நம்பகத்தன்மை, குறைந்த விலை, அணுக்கம் (3) தூய்மையான எரிசக்தி முன்முயற்சிகள் (4) எரிசக்தி செயல் திறன் (5) சுற்றுச்சூழல் நிலைத்தன்மை (6) புதிய முன்முயற்சிகள். இந்த அளவுகோல்கள் மொத்தம் 27 குறிகாட்டிகளைக் கொண்டுள்ளது. எஸ்இசிஐ-யின் முதலாவது சுற்று வெளியீட்டின் மதிப்பீடுகள் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், முன்னணி மாநிலங்கள், சாதனை படைத்தவை, முன்னேற விரும்புபவை என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், சிறந்த கொள்கைகளை வகுக்கவும், தங்களது எரிசக்தி வளங்களை சிறப்பாக பராமரிக்கவும், இந்தக் குறியீட்டை தங்களது செயல் திறனுக்குரிய அளவுகோலாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

***


(வெளியீட்டு அடையாள எண்: 1814767) வருகையாளர் எண்ணிக்கை : 322
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Telugu , Malayalam