குடியரசுத் தலைவர் செயலகம்
சைத்ர சுக்லாதி, உகாதி, குடி பட்வா, சேட்டி சந்த், நவ்ரே, சஜிபு சேரோபா ஆகிய விழாக்களையொட்டி குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
01 APR 2022 5:37PM by PIB Chennai
சைத்ர சுக்லாதி, உகாதி, குடி பட்வா, சேட்டி சந்த், நவ்ரே, சஜிபு சேரோபா ஆகிய விழாக்களையொட்டி குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“சைத்ர சுக்லாதி, உகாதி, குடி பட்வா, சேட்டி சந்த், நவ்ரே, சஜிபு சேரோபா ஆகிய புனிதமான விழாக்களையொட்டி குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்திய புத்தாண்டுகளின் தொடக்கத்தையும், வசந்த காலத்தையும் வரவேற்பது நாடு முழுவதும் பல்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாக்கள் நமது கலாச்சார மற்றும் சமூக ஒற்றுமையின் பிணைப்பை வலுப்படுத்துகிறது. உற்சாகமான விழாக்கள் நமது சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வை வலுப்படுத்துகிறது.
இந்த விழாக்கள் அனைவரின் வாழ்க்கையில் அன்பையும், நல்லெண்ணத்தையும் வளர்க்கட்டும். இந்த புத்தாண்டில் புதிய ஆர்வத்துடன் தேசக்கட்டுமானத்திற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பங்களிப்பு செய்வோம்” என்று குடியரசுத் தலைவர் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
***************
(Release ID: 1812528)