சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் கட்டணங்கள் மற்றும் விலை நிர்ணயம் குறித்த ஆலோசனை அறிக்கை குறித்த கருத்துகளை தேசிய சுகாதார ஆணையம் வரவேற்கிறது
Posted On:
01 APR 2022 11:24AM by PIB Chennai
ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் கட்டணங்கள் மற்றும் விலை நிர்ணயம் குறித்த ஆலோசனை அறிக்கையை தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ளது.
பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களில் பயன்படுத்தப்படும் பல்வேறு வழங்குநர் கட்டண முறைகளின் உலகளாவிய கண்ணோட்டத்தை ஆலோசனைக் கட்டுரை வழங்குகிறது. வழங்குநர்களுக்கு எவ்வாறு நிதி திருப்பிச் செலுத்தப்படுகிறது என்பது பற்றிய விரிவான விளக்கத்தையும் இது வழங்குகிறது.
இரண்டாவதாக, திட்டத்தின் கீழ் விலை நிர்ணயம் செய்வதற்கான செலவு ஆதாரங்களைப் பயன்படுத்துவது பற்றி கட்டுரை விவாதிக்கிறது. பல்வேறு மருத்துவமனைகளில் சுகாதார சேவைகளை வழங்குவதற்கான செலவில் உள்ள பன்முகத்தன்மையின் பகுப்பாய்வை இது முன்வைப்பதோடு மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டிய கட்டணங்களை தீர்மானிப்பதற்கான கட்டமைப்பைப் பற்றி விவாதிக்கிறது.
மூன்றாவதாக, நோயறிதல் தொடர்பான குழுவின் முன்மொழியப்பட்ட மாதிரியை கட்டுரை விவரிக்கிறது. நான்காவதாக, சுகாதார தொழில் நுட்ப மேம்பாடு (ஹெல்த் டெக்னாலஜி அசெஸ்மென்ட்) பயன்பாட்டு செயல்முறைகளை கட்டுரை விவரிக்கிறது. இறுதியாக, பணவீக்கத்திற்கான வருடாந்திர அடிப்படையில் விலைகளைத் தொடர்ந்து புதுப்பிக்கும் அணுகுமுறையை அது அலசுகிறது.
இந்தக் கட்டுரையின் மூலம் பல்வேறு விஷயங்கள் குறித்த பங்குதாரர்களின் கருத்துகளை தேசிய சுகாதார ஆணையம் வரவேற்கிறது.
கட்டுரை குறித்து பேசிய தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர். ஆர் எஸ் சர்மா, “அனைத்து பங்குதாரர்களும் இந்த ஆய்வறிக்கையை ஆராய்ந்து, அவர்களின் மதிப்புமிக்க கருத்துக்களை எங்களுக்கு வழங்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
https://pmjay.gov.in/sites/default/files/2022-03/AB%20PM JAY%20Price%20Consultation%20Paper_25.03.2022.pdf எனும் இணைப்பில் கட்டுரையை காணலாம்.
அறிக்கை குறித்த கருத்துகளை hpqa.pricing@nha.gov.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1812209
***************
(Release ID: 1812262)
Visitor Counter : 192