வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியா- ஐக்கிய அரபு எமிரேட் இடையேயான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் மே1, 2022 முதல் செயல்பாட்டிற்கு வரும் என்கிறார் திரு பியுஷ் கோயல்
Posted On:
29 MAR 2022 12:49PM by PIB Chennai
இந்தியா- ஐக்கிய அரபு எமிரேட் இடையேயான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் மே1, 2022 முதல் செயல்பாட்டிற்கு வரும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
துபாயில் திங்கட்கிழமை நடைபெற்ற இந்தியா- ஐக்கிய அரபு எமிரேட் இடையேயான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக நடைபெற்ற இருநாட்டு வர்த்தக கூட்டத்தில் பேசிய அவர், வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் புதிய தொடக்கத்தையும், சிறந்த வெளிப்பாடுகளையும் மற்றும் முன்னுதாரணமான மாற்றங்களையும் ஏற்படுத்தும் என்று கூறினார். ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு ஐக்கிய அரபு எமிரேட் நுழைவு வாயிலாக இருப்பதாக இந்தியா கருதுகிறது என்று திரு கோயல் தெரிவித்தார். இது உலகம் முழுவதும் சிறந்த சந்தை வாய்ப்புக்கு வகை செய்யும் என்று கூறினார்.
இக்கூட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்டின் சார்பில் அந்நாட்டு வெளிநாட்டு வர்த்தக இணைய அமைச்சர் திரு எச்.இ.தானி அல் சியோடி பங்கேற்றார்.
***************
(Release ID: 1810848)
Visitor Counter : 231