மத்திய அமைச்சரவை

பிரதமரின் ஏழைகள் நலன் உணவுத் திட்டத்தை (PM-GKAY) மேலும் 6 மாதங்களுக்கு (ஏப்ரல்-செப்டம்பர், 2022) நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


ஏழைகள் மற்றும் நலிந்தோர் பயன்பெறுவதற்கான நடவடிக்கை

பிரதமரின் ஏழைகள் நலன் உணவுத் திட்டத்தின் கீழ் சுமார் 3.4 லட்சம் கோடி ரூபாய் செலவில், 1,000 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளது.

Posted On: 26 MAR 2022 7:27PM by PIB Chennai

சமூகத்தின் ஏழை மற்றும் நலிவடைந்த  பிரிவு மக்கள் மீதான அக்கறை மற்றும் அவர்களது உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, பிரதமரின்  கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PM-GKAY) திட்டத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. செப்டம்பர் 2022 (கட்டம் VI).

பிரதமரின்  ஏழைகள் நலன்  உணவுத்   (PM-GKAY) திட்டத்தின்  ஐந்தாவது கட்டம் 2022-ம் ஆண்டு  மார்ச் மாதத்தில் முடிவடையவிருந்தது. உலகின் மிகப்பெரிய உணவுப் பாதுகாப்புத் திட்டமாக பிரதமரின்   ஏழைகள் நலன்  உணவுத்   (PM-GKAY) திட்டம்  கடந்த   2020-ம் ஆண்டு  ஏப்ரல் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது நினைவுகூறத்தக்கது.

இத்திட்டத்திற்காக மத்திய அரசு இதுவரை சுமார் 2.60 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது, மேலும் அடுத்த 6 மாதங்களுக்கு அதாவது, 2022-ம் ஆண்டு  செப்டம்பர்  மாதம் வரை  80,000 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளது. இதனையடுத்து, இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 3.40 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ் 80 கோடிப் பேர்  பயன்பெறுவர்: இதற்கான முழு நிதியையும் மத்திய அரசே வழங்கும்.

கோவிட்-19 தொற்று  பரவல் கணிசமான அளவில் குறைந்திருந்த போதிலும் , பொருளாதார நடவடிக்கைகள் வேகம் அதிகரித்துள்ள நிலையிலும், இத்திட்டத்தை  நீட்டிப்பதன் மூலம், இந்த மீட்புக் காலத்தில் எந்த ஒரு ஏழை மக்களும் உணவின்றி  படுக்கைக்குச் செல்லாத நிலை உறுதி செய்யப்படும்.

நீட்டிக்கப்பட்ட பிரதமரின்  ஏழைகள் நலன் உணவுத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பயனாளியும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தானியங்களுடன் கூடுதலாக நபர்  ஒருவருக்கு  மாதம் 5 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் . அதாவது ஒவ்வொரு ஏழைக் குடும்பமும் சாதாரண ரேஷன் அளவை விட  இருமடங்கு அதிகமாக பெறுவார்கள்.

இத்திட்டத்தின் ஐந்தாம் கட்டம் வரை சுமார் 759 லட்சம் மெட்ரிக் டன் இலவச உணவு தானியங்களை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நீட்டிப்பின் மூலம் மேலும் 244 லட்சம் மெட்ரிக் டன் இலவச உணவு தானியங்களுடன் (கட்டம் VI), இலவச உணவு தானியங்களின் மொத்த  ஒதுக்கீடு. தற்போது 1,003 லட்சம் மெட்ரிக் டன்னாக  உள்ளது .

நாடு முழுவதும் உள்ள 5 லட்சம் ரேஷன் கடைகளில், ஒரு நாடு ஒரே ரேஷன் அட்டை  (ONORC) திட்டத்தின் கீழ் எந்தவொரு புலம்பெயர்ந்த தொழிலாளர் அல்லது பயனாளியும் இலவச உணவு தானியங்களைப்   பெற முடியும். இதுவரை, 61 கோடிக்கும் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த  மக்கள்  பயனடைந்துள்ளனர்.

இந்த நூற்றாண்டின் மிக மோசமான தொற்று நோய் பாதிப்பு இருந்தபோதிலும், விவசாயிகளுக்கு அரசால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான தொகையை வழங்கி இதுவரை இல்லாத அளவு கொள்முதல் செய்யப்பட்டதன் காரணமாக விவசாயிகள் உணவு தானினியங்களை அதிக அளவில் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளதற்காக  விவசாயிகள் - 'அன்னதாதா'  எனப் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1810048

************



(Release ID: 1810219) Visitor Counter : 317