கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
சாகர்மாலா திட்டத்தின் நிலவரம் : தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்
Posted On:
25 MAR 2022 12:10PM by PIB Chennai
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
சாகர்மாலா திட்டத்தின் ஒரு பகுதியாக, 800-க்கும் மேற்பட்ட திட்டங்கள் சுமார் ரூ 5.48 லட்சம் கோடியில் செயல்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போதுள்ள துறைமுகங்கள் மற்றும் முனையங்களின் நவீனமயமாக்கல், புதிய துறைமுகங்கள், முனையங்கள், சுற்றுலா மையங்கள், துறைமுக இணைப்பு மேம்பாடு, உள்நாட்டு நீர்வழிகள், கலங்கரை விளக்கங்கள் சுற்றுலா, துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொழில்மயமாக்கல், திறன் மேம்பாடு, தொழில்நுட்ப மையங்கள் போன்ற பல்வேறு வகைகளைச் சேர்ந்த திட்டங்கள் இவற்றில் அடங்கும்.
ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம், தீன்தயாள் துறைமுகம் மற்றும் பாரதீப் துறைமுகத்தில் ஸ்மார்ட் தொழில்துறை துறைமுக நகரம் மற்றும் வ உ சிதம்பரனார் துறைமுகப் பகுதியில் கடலோர வேலைவாய்ப்புப் பிரிவு ஆகியவை சாகர்மாலா திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
ரூ 1,25,776 கோடி மதிப்பீட்டிலான புதிய துறைமுகங்களின் வளர்ச்சி தொடர்பான 14 திட்டங்களும் சாகர்மாலா திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட கடலோர மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டங்கள் பரவியுள்ளன. மாநிலக் கடல்சார் வாரியங்கள் மற்றும் பெரிய துறைமுகங்கள் போன்றவற்றால் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1809581
**********************
(Release ID: 1809798)
Visitor Counter : 181