தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திரு அனுராக் சிங் தாக்கூர் மார்ச் 26 முதல் 28 வரை துபாயில் பயணம் மேற்கொள்கிறார்

प्रविष्टि तिथि: 25 MAR 2022 4:16PM by PIB Chennai

மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுக்கள் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், 2022 மார்ச் 26 முதல் 28 வரை துபாயில் மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

இந்தப் பயணத்தின் போது திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி உலகத்தின் முன்னணி ஆளுமைகளுடன் வட்டமேசைக் கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்பார். துபாய் கண்காட்சியின் இந்திய அரங்கையும் அவர் பார்வையிடுவார். இந்த வாரம் முழுவதும் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வாரம் நடைபெறுகிறது.

அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், இந்தப் பயணத்தின் போது, அமைச்சர்களையும், தொழில்துறை தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1809645

********


(रिलीज़ आईडी: 1809755) आगंतुक पटल : 190
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Kannada