வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வாரியற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையை இந்தியாவும் இங்கிலாந்தும் நிறைவு செய்துள்ளன

प्रविष्टि तिथि: 25 MAR 2022 11:59AM by PIB Chennai

இந்தியா-இங்கிலாந்து வாரியற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தையை இந்தியா மற்றும் இங்கிலாந்து 17 மார்ச் 2022 (வியாழன்) அன்று நிறைவு செய்தன.

இந்திய அதிகாரிகள் குழு லண்டனில் தொழில்நுட்பப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. பேச்சுவார்த்தைகள் கலப்பு முறையில் நடத்தப்பட்ட நிலையில், சிலர் இங்கிலாந்தில் உள்ள பேச்சுவார்த்தை மையத்திலும், மற்றவர்கள் காணொலி மூலமும் கலந்து கொண்டனர்.

இந்தச் சுற்றுப் பேச்சுவார்த்தைக்காக, ஒப்பந்தத்தின் பெரும்பாலான அத்தியாயங்களின் வரைவு ஒப்பந்த உரை பகிரப்பட்டு விவாதிக்கப்பட்டது. 26 கொள்கைப் பகுதிகளை உள்ளடக்கிய 64 தனித்தனி அமர்வுகளில் இரு தரப்பிலிருந்தும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துரையாடினர்.

மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை 2022 ஏப்ரலில் இந்தியாவில் நடத்தப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1809513

***************


(रिलीज़ आईडी: 1809677) आगंतुक पटल : 215
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Odia , Malayalam