இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்
இந்தியாவின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கே.விஜய்ராகவன் மற்றும் சென்னை இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி ஆகியோர் அக்வாமேப் நீர் மேலாண்மை மற்றும் கொள்கை மையத்தை திறந்து வைத்தனர்.
Posted On:
21 MAR 2022 11:41AM by PIB Chennai
அக்வாமேப் என்ற புதிய நீர் மேலாண்மை மற்றும் கொள்கை மையத்தை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில், 2022-ம் ஆண்டு மார்ச், 19-ம் தேதி, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் திறந்து வைத்தார். அதன் இணையதளத்தையம் -(https://aquamap.iitm.ac.in/) அவர் தொடங்கி வைத்தார். அவருடன் இந்திய தொழில்நுட்பக்க கல்வி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, அக்வாமேப்-ன் ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் லிஜி பிலிப் மற்றும் ஆய்வுப் பணி பகுப்பாய்வுப் பிரிவுத் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பி.பாலசுப்ரமணியன், இதிஹாசா ஆராய்ச்சி மற்றும் மின்னணுத் துறைத் தலைவர் கிருஷ்ணன் நாராயணன் மற்றும் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் ஆகியோர் இணைந்து தொடக்கி வைத்தனர்.
அக்வாமேப் நிறுவப்பட்ட சூழலை விளக்கும் இந்நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியர்.விஜய்ராகவன், “நமது உலகம் பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தின் மீதான அழுத்தத்தின் விளைவுகளை எதிர்கொள்கிறது. காற்று, நீர் மற்றும் நிலத்தை புதுப்பிப்பதன் மூலம், நிலையான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறினார். "நமது அனைத்து தேவைகளிலும் விவசாயத் துறையில் நீர் பயன்பாடு அதிகளவில் உள்ளது. எனவே விவசாய நீர் பயன்பாட்டு செயல்திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவது அக்வாமேப்-இன் முக்கிய நோக்கமாகும் என்று கூறினார்."
நவீன மற்றும் உகந்த நீர் மேலாண்மை நடைமுறைகளை வடிவமைத்து உருவாக்கி, அவற்றை அமல்படுத்துவதன் மூலம் சிக்கலான மற்றும் சவாலான நீர் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டும், நாட்டின் பல்வேறு இடங்களில், மேலாண்மை மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களில் சிறந்த நடைமுறைகளை மேம்படுத்துவது ஆகியவற்றில் அக்வாமேப்-மையம் அளவிடக்கூடிய மாதிரியாக செயல்படும். அக்வாமேப் என்பது ஒரு தேசிய நீர் மையமாகும், சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக்க கல்வி நிறுவனம் மற்றும் தார்வாட் இந்திய தொழில்நுட்பக்க கல்வி நிறுவனமும் இணைந்து 'தண்ணீர் பாதுகாப்பு மற்றும் வேளாண்மைக்கான தரவு அறிவியல்' ஆகியவற்றில் செயல்பாடுகளை மேற்கொள்ளவுள்ளது.
அக்வாமேப்-மையத்தின் முக்கிய செயல்பாடுகள் பின்வருமாறு:
• களத்தில் (கிராமங்கள் மற்றும் நகரங்களில்) நீர் தொழில்நுட்பங்கள் மற்றும் மேலாண்மை நடைமுறைகளைச் செயல்படுத்துதல்,
• நீர்/கழிவுநீர் மேலாண்மையில் உள்ள பெரும் சவால்களை அடையாளம் கண்டு கவனம் செலுத்துதல்,
• அதிநவீன ஹைட்ரோ-தகவலியல் ஆய்வகத்தை அமைத்தல்
பேராசிரியர். லிஜி பிலிப், மையம் ஆதரிக்கும் கீழ்கண்ட முதல் மூன்று திட்டங்களை அறிவித்து, “எங்களிடம் வேதியியல், சிவில், கெமிக்கல், மனிதநேயம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல்துறை ஆசிரிய குழு அக்வாமேப்-க்கு ஆதரவு அளிக்கும் என்றார். நிர்வாகம் மற்றும் ஆலோசனைக் குழுவில் எங்களுக்கு உரிய ஆலோசனை வழங்கத் தண்ணீர் தொடர்பான நிபுணத்துவம் கொண்ட சிறந்த வல்லுநர் குழுவும் உள்ளது.
1. நீர் மற்றும் மண் வளம் தொடர்பான தரப் பகுப்பாய்வு: சுற்றுச்சூழல் மேலாண்மைக்காக கிராமத்தின் டிஜிட்டல் இரட்டையை உருவாக்குதல்.
2. கிராமப்புறங்களுக்கான சுத்தமான மற்றும் ஆரோக்கியமான கழிவு மேலாண்மை.
3. தானியங்கி கட்டுப்பாட்டுடன் கூடிய கிராமப்புற நீர் விநியோகத் திட்டங்கள்.
டாக்டர் பாலசுப்ரமணியன் பேசுகையில், “அக்வாமேப் மூலம் எங்கள் கல்வி நிறுவனத்திற்கும், நாட்டிற்கும் சேவையாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கிய சென்னை இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்திற்கு நானும் கிருஷ்ணனும் நன்றி கூறுகிறோம். தனித்துவம் வாய்ந்த முன்னாள் மாணவர்கள் மூலம், இந்த மையத்தில் நீர் தொடர்பான அம்சங்களில் நிபுணத்துவம் மற்றும் ஆர்வத்தை தட்டியெழுப்ப முடியும்." என்றார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1807507
(Release ID: 1807745)
Visitor Counter : 507