வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஜிஐ குறியிடப்பட்ட முக்கிய வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது
Posted On:
17 MAR 2022 11:08AM by PIB Chennai
உள்நாட்டில் பெறப்பட்ட புவிசார் குறியீடுகளின் (ஜிஐ) அடிப்படையில் வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் முயற்சியில், புதிய தயாரிப்புகள் மற்றும் ஏற்றுமதிக்கான புதிய இடங்களை அடையாளம் காண்பதில் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
டார்ஜிலிங் தேயிலை மற்றும் பாசுமதி அரிசி ஆகிய இந்தியாவின் பிரபலமான புவிசார் குறியீடுகளைக் கொண்ட இரண்டு வேளாண் பொருட்கள், உலகளவில் சந்தைகளைக் கொண்டுள்ளன. நாட்டின் பல்வேறு மூலைகளிலும் புவிசார் குறியிடப்பட்ட தயாரிப்புகள் சிறந்த வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கின்றன. அதிக எண்ணிக்கையிலான நுகர்வோரைச் சென்றடையும் வகையில் அவற்றைச் சரியான முறையில் சந்தைப்படுத்த வேண்டும்.
மாண்புமிகு பிரதமரின் 'உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்' மற்றும் 'சுயசார்பு இந்தியா' போன்ற தொலைநோக்குத் திட்டங்களுக்கு ஏற்ற வகையில், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) மூலம், கருப்பு உப்பு [Kala-Namak] போன்ற தயாரிப்புகள், நாகலாந்து மிளகாய் [Naga-Mircha], அசாம் காஜி நேமு, பெங்களூர் ரோஸ் ஆனியன், நாக்பூர் ஆரஞ்சு, புவிசார் குறியீடுகளைக் கொண்ட மாம்பழ வகைகள், ஷாஹி லிச்சி, பாலியா கோதுமை, மதுரை மல்லி, பர்தமான் மிஹிதானா மற்றும் சிதாபோக், தஹானு கோல்வாட் சப்போட்டா, ஜல்கான் வாழை, வாழைக்குளம் அன்னாசி, மற்றும் மறையூர் வெல்லம் போன்ற பொருட்களுக்கு உலகளவில் புதிய சந்தைகளில் சோதனை அடிப்படையிலான ஏற்றுமதி எளிதாக்கப்பட்டுள்ளது.
நாகாலாந்தில் இருந்து நாகா மிர்ச்சா (கிங் மிளகாய்), மணிப்பூர் மற்றும் அஸ்ஸாமில் இருந்து கருப்பு அரிசி, ஆகியவற்றை இங்கிலாந்துக்கும், அஸ்ஸாம் எலுமிச்சை, மூன்று புவிசார் குறிப்பட்ட மாம்பழ வகைகள் ஆகியவை இங்கிலாந்து மற்றும் இத்தாலி நாடுகளுக்கும் ஆகியவை 2021-ம் ஆண்டில் குறிப்பிடத்தக்க புவிசார் குறியீடுகளைக் கொண்ட தயாரிப்புகளின் ஏற்றுமதியில் அடங்கும். லக்ஷ்மன்போக் மேற்கு வங்காளத்திலிருந்தும், சர்தாலு வகை மாம்பழம் பீகாரிலிருந்து பஹ்ரைன் மற்றும் கத்தார் நாடுகளுக்கும் , மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் இருந்து ஜாய்நகர் மோவாவின் மாதிரி ஏற்றுமதி கொல்கத்தா வழியாக பஹ்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
புவிசார் குறியீடுகளைக் கொண்ட மாதிரி வேளாண் பொருட்களின் ஏற்றுமதியைத் தொடர்ந்து, ஜாய்நகர் மோ-விற்கான கூடுதல் கொள்முதல் ஆணைகள் பஹ்ரைனில் இருந்து பெறப்பட்டன.
பீகாரில் இருந்து புவிசார் குறியிடப்பட்ட பொருட்களின் ஏற்றுமதிக்கு ஒரு முக்கிய உந்து சக்தியாக, 524 கிலோ எடை கொண்ட புவிசார் குறியீட்டுடன் கூடிய ஷாஹி லிச்சியின் முதல் ஏற்றுமதி, 2021-ம் ஆண்டு மே மாதம் பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் இருந்து லண்டனுக்கு நடைபெற்றது. ஆந்திராவில் இருந்து தென் கொரியாவிற்கு புவிசார் குறியிடப்பட்ட பங்கனப்பள்ளி, நகனபள்ளே மாம்பழம் ஏற்றுமதி செய்யப்பட்டது.
வாரணாசியில் குறிப்பான புவிசார் குறியிடப்பட்ட வேளாண் பொருட்களுக்களுக்கான ஏற்றுமதி மையத்தை உருவாக்க, உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள் (FPOs), உணவு உற்பத்தி நிறுவனங்கள் (FPCs) மற்றும் ஏற்றுமதியாளர்களை சர்வதேச வணிக சமூகங்களுடன் இணைப்பதில் மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்துவருகிறது.
புவிசார் குறியிடப்பட்ட தயாரிப்புகளின் விளம்பரத்தை உறுதி செய்யம் வகையில், வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் ஒரு முக்கிய இடம் கண்டறியப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு ஜூன் மாதத்தில், பருவத்தின் முதல் ஏற்றுமதியான 1048 கிலோ புவிசார் குறியிடப்பட்ட மலிஹபாடி துஸ்ஸேரி மாம்பழம் லக்னோவிலிருந்து இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
மணிப்பூர் கருப்பு அரிசி , மணிப்பூர் கச்சாய் எலுமிச்சை, மிசோ மிளகாய், அருணாச்சல ஆரஞ்சு, மேகாலயா காசி மாண்டரின், அஸ்ஸாம் காஜி நேமு, கர்பி ஆங்லாங் இஞ்சி, ஜோஹா ரைஸ் மற்றும் திரிபுரா குயின் அன்னாசிப்பழம் போன்ற வடகிழக்கு பிராந்தியத்தின் தனித்துவமான புவிசார் குறியீடுகளைக் கொண்ட தயாரிப்புகளை விளம்பரப்படுத்த, மத்திய அரசு வெள்ளி பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் APEDA மூலம் வாங்குபவர்-விற்பவர் இடையேயான சந்திப்புகளை ஏற்பாடு செய்து வருகிறது. வடகிழக்கு மண்டலங்களில் உள்ள வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள சங்கங்கள் மற்றும் இந்தியன் ரயில்வே , வெளிநாட்டு வர்த்தகத்திற்கான தலைமை இயக்ககம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டுப் பட்டறைகளை மத்திய அரசு நடத்தி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1806816
***************
(Release ID: 1806941)
Visitor Counter : 266