குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஐந்து நாடுகளின் தூதர்கள் நியமனப் பத்திரங்களை குடியரசுத் தலைவரிடம் வழங்கினர்

Posted On: 16 MAR 2022 2:31PM by PIB Chennai

அல்ஜிரியா மக்கள் ஜனநாயக குடியரசு, மாலாவி, கனடா குடியரசு, இந்தோனேஷிய குடியரசு, ரஷ்ய கூட்டமைப்பு ஆகியவற்றின் தூதர்கள் / துணைத் தூதர்களின் நியமனப் பத்திரங்களை குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (மார்ச் 16, 2022) குடியரசுத் தலைவர் திரு.ராம் நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார்.

பின்னர் ஐந்து தூதர்களுடனும் தனித்தனியாக குடியரசுத் தலைவர் கலந்துரையாடினார். இவர்களின் நியமனங்களுக்காக வாழ்த்துத் தெரிவித்த அவர், இந்த நாடுகளுடன் இந்தியா இனிய நட்பு ரீதியான உறவுகளை பகிர்ந்து கொண்டிருப்பது பற்றி குறிப்பிட்டார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் இவர்கள் வெற்றி பெறவும் குடியரசுத் தலைவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்த தூதர்கள் மற்றும் துணைத் தூதர்கள் மூலம் அவர்களின் தலைவர்களுக்கு தமது தனிப்பட்ட வாழ்த்துக்களை குடியரசுத் தலைவர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் பங்கேற்ற தூதர்கள் இந்தியாவுடனான தங்களின் உறவுகளை வலுப்படுத்த நெருக்கமாக பணியாற்றுவதற்கு தங்களின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினர்.

 *****


(Release ID: 1806554) Visitor Counter : 195