இந்திய போட்டிகள் ஆணையம்
ஃப்யூச்சர் ஜெனரலி இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் சமபங்குகளை ஜெனரலி பார்டிசிபேஷன்ஸ் நெதர்லாந்து என்.வி வாங்குவதற்கு இந்தியப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது
प्रविष्टि तिथि:
16 MAR 2022 9:10AM by PIB Chennai
ஃப்யூச்சர் ஜெனரலி இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் (எஃப்ஜிஐஐசி) சமபங்குகளை ஜெனரலி பார்டிசிபேஷன்ஸ் நெதர்லாந்து (ஜிபிஎன்) என்.வி வாங்குவதற்கு இந்தியப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஜெனரலி குழுமம் உலகளவின் காப்பீடு வழங்குவதாகும். இது தற்போது எஃப்ஜிஐஐசி மூலம் இந்தியாவில் பொதுக் காப்பீட்டு துறையில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவில் ஆயுள் காப்பீடு அல்லாத அல்லது பொதுக் காப்பீடு சேவைகளை வழங்கி வருகிறது. ஃப்யூச்சர் என்டர்பிரைசஸ் நிறுவனம் வைத்துள்ள எஃப்ஜிஐஐசி-ன் சமபங்கு மூலதனத்தில் சுமார் 25 சதவீதத்தை வாங்குவதற்கு ஜிபிஎன் உத்தேசித்துள்ளது. இதன் மூலம் எஃப்ஜிஐஐசி-ல் ஜிபிஎன்-ன் (நேரடி மற்றும் மறைமுக) மொத்த பங்குகள் 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக அதிகரிக்கும்.
***************
(रिलीज़ आईडी: 1806476)
आगंतुक पटल : 271