உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
உற்பத்தியுடன இணைந்த ஊக்கத்தொகை பெறுவதற்கு ட்ரோன் தொழில் நிறுவனங்களிடமிருந்து அரசு விண்ணப்பங்களை வரவேற்கிறது
Posted On:
11 MAR 2022 10:57AM by PIB Chennai
உற்பத்தியுடன இணைந்த ஊக்கத்தொகை பெறுவதற்கு ட்ரோன் தொழில் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் 30 செப்டம்பர் 2021 அன்று அறிவிக்கப்பட்டது. கடந்த 3 நிதியாண்டுகளாக மொத்தம் ரூ.120 கோடி ஒதுக்கப்பட்டது. இது, 2020-21 நிதியாண்டில் அனைத்து உள்நாட்டு ட்ரோன் உற்பத்தியாளர்களின் ஒட்டுமொத்த விற்று வரவைவிட இருமடங்காகும். உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வீதமானது மதிப்புக்கூடுதல் தொகையில் 20% ஆகும். இது உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டங்களிலேயே அதிகமானதாகும். மதிப்புக்கூடுதல் என்பது ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் உதிரிபாகங்களின் கொள்முதல் விலை நீங்கலாக, வருடாந்தர விற்பனை வருவாயாக கணக்கிடப்படுகிறது. ட்ரோன்களுக்கு ஒரு சிறப்பு நேர்வாக, மூன்று ஆண்டுகளாகவே உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை தொடர்ந்து 20% ஆக உள்ளது.
இத்திட்டத்தின்படி, குறைந்தபட்ச மதிப்புக் கூடுதல் விதிமுறையின்படி ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் உதிரிப்பாகங்களின் நிகர விற்பனையில் 40% ஆக உள்ள நிலையில் ட்ரோன்களுக்கு ஒரு சிறப்பு நேர்வாக 50% ஆக உள்ளது.
இந்நிலையில், ட்ரோன் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களிடமிருந்து உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 31 மார்ச் 2022 ஆகும்.
கூடுதல் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1804978
(Release ID: 1805109)
Visitor Counter : 350