ரெயில்வே அமைச்சகம்

தொழில்நுட்பம் அல்லாத பிரபல பிரிவுகளைச் சேர்ந்த பதவிகளுக்கான விண்ணப்பதாரர்களின் கவலைகளை ரயில்வே குழு நிவர்த்தி செய்கிறது

Posted On: 10 MAR 2022 4:11PM by PIB Chennai

ரயில்வே அமைச்சகம் கடந்த ஜனவரி 26ம் தேதி, பிறப்பித்த உத்தரவு எண் ERB-I/2022/23/06-ன் படி, CEN 01/2019  (தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகள்)  மற்றும் CEN RRC-01/2019 (Level-1) விண்ணப்பதாரர்களின் கவலைகள் குறித்து ஆலோசிக்கக்  குழு ஒன்றை அமைத்துள்ளது.  கீழ்கண்ட நடைமுறைகளைப்  பின்பற்ற ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

* CEN 01/2019 (தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகள்)இரண்டாம் நிலை கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வுக்கு, 20 மடங்கு விண்ணப்பதார்கள் சம்பளப்  பிரிவு வாரியாகத்  தேர்வு செய்யப்படுவர். 

* ஏற்கனவே தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தொடர்ந்து தகுதியானவர்களாக இருப்பர்.

*  கூடுதல் விண்ணப்பதாரர்களின் பட்டியல், சம்பளப்  பிரிவு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

* ரயில்வே தேர்வு வாரியங்கள்  வாரியாக, ஒவ்வொரு சம்பள பிரிவுக்கும்,  2ம் நிலை கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வுக்கான விண்ணப்தார்கள் ஒரே ஷிப்ட்-ல் இடம் பெறுவர். இது இயல்பாக்கத்தை அகற்றும். அதிக எண்ணிக்கை காரணமாக, ஒரே ஷிப்ட் சாத்தியம் இல்லை என்றால், விகிதச்சார  அடிப்படையில் இயல்பாக்கம் செய்யப்படும்.

CEN RRC-01/2019 (Level-1) ஒரே தேர்வாக இருக்கும். இரண்டாம் நிலை கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு இருக்காது.

*  ரயில்வே தேர்வு வாரியங்கள்  வாரியாக முதல் நிலைத்  தேர்வு நடத்தப்படும். தேர்வுகளை விரைவாக நடத்தி முடிக்க, ஒவ்வொரு தேர்வு வாரியத்திலும், ஷிப்ட்களின் எண்ணிக்கையை குறைக்க அதிகபட்சத்  திறனை பயன்படுத்த பரிந்துரைக்கப்படும்.

* சதவீத அடிப்படையிலான இயல்பாக்கம், புரிந்து கொள்ள எளிதாக இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட ஷிப்ட்கள் இருக்கும் இடங்களில் இந்த முறை பயன்படுத்தப்படும்.

* முதல் நிலையின் பல பதவிகளுக்கு, இந்திய ரயில்வேயின் மருத்துவ கையேட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி மருத்துவ தரநிலைகள் பயன்படுத்தப்படும்.

* பொருளாதாரத்தில்  பின்தங்கிய பிரிவினின் கீழ் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு, கிடைக்கும் எந்தவித வருமானம் மற்றும் சொத்து சான்றிதழும் செல்லுபடியானதாகக்  கருதப்படும்.

CEN 01/2019 (தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகள்)  மற்றும் CEN RRC-01/2019 (Level-1)-க்கான அட்டவணை (தற்காலிகம்)

* அனைத்து சம்பளப்  பிரிவுகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட முடிவுகள், 2022 ஏப்ரல் முதல் வாரம் அறிவிக்கப்படும்.

* 6ம் நிலை சம்பளத்துக்கான, 2ம் நிலை கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு 2022, மே மாதம் நடத்தப்படும்.

* இதர சம்பளப்   பிரிவுகளுக்கான 2ம் நிலை கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு நியாயமான இடைவெளிக்குப்பின் நடத்தப்படும்.

* 2ம் நிலை கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வைத்  தவிர்க்க, முதல் நிலை கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வுக்கு சிறப்பு நிபந்தனைகளுடன் மாற்றியமைக்கப்பட்ட  முறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

* ஒவ்வொரு ஷிப்ட்டின் தேவை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதால், முதல் நிலை கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வை நடத்தக்  கூடுதல் உள்கட்டமைப்பு மற்றும் பொருட்களைப்  பயன்படுத்த வேண்டும். முதல்நிலை கம்ப்யூட்டர் தேர்வை கூடிய விரைவில் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

* ஆகையால், முதல் நிலை கம்யூட்டர் தேர்வை 2022 ஜூலை முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

**********

 



(Release ID: 1804874) Visitor Counter : 220