இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

தேசிய இளைஞர் நாடாளுமன்ற திருவிழாவின் மூன்றாவது பதிப்பின் நிறைவு நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா உரையாற்றுகிறார், தொடக்க நிகழ்வில் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் திரு. அனுராக் தாகூர் பேசுகிறார்.

Posted On: 09 MAR 2022 3:32PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் 2022 மார்ச் 11 அன்று நடைபெற உள்ள தேசிய இளைஞர் நாடாளுமன்ற திருவிழாவின் மூன்றாவது பதிப்பின் நிறைவு நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா உரையாற்றுகிறார். நாளை நடைபெற உள்ள தேசிய சுற்றின் தொடக்க நிகழ்வில் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் திரு. அனுராக் தாகூர் பேசுகிறார்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சர் திரு. நிசித் ப்ரமானிக் சான்றிதழ்களை வழங்குகிறார். தேசிய அளவில் முதல் மூன்று பரிசுகளை வெல்பவர்கள் நிறைவு நிகழ்ச்சியின் போது மக்களவை தலைவர் முன்பு பேசும் வாய்ப்பையும் பெறுவார்கள்.

வரும் வருடங்களில் பொதுசேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைய உள்ள இளைஞர்களின் குரலைக் கேட்பதே தேசிய இளைஞர் நாடாளுமன்ற திருவிழாவின் நோக்கமாகும். 2017-ம் ஆண்டு டிசம்பர் 31 அன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது மனதின் குரல் நிகழ்ச்சியில் வழங்கிய ஆலோசனையின் படி தேசிய இளைஞர் நாடாளுமன்ற திருவிழா அமைந்துள்ளது.

அவரது சிந்தனையில் இருந்து ஊக்கம் பெற்று தேசிய இளைஞர் நாடாளுமன்ற திருவிழாவின் முதல் பதிப்பு 2019 ஜனவரி 12 முதல் பிப்ரவரி 27 வரை 'புதிய இந்தியாவின் குரலாக இருந்து தீர்வுகளை கண்டறிந்து கொள்கைக்குப் பங்காற்றுங்கள்' எனும் தலைப்பில் நடைபெற்றது. மொத்தம் 88000 இளைஞர்கள் இதில் கலந்து கொண்டனர்.

நாட்டுக்கான இளைஞர்களின் கருத்துக்கள் மற்றும் கனவுகளை வெளிப்படுத்துவதற்கான தளத்தை வழங்குவதும் தங்களது  உள்ளூர் பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பளிப்பதும் தேசிய இளைஞர் நாடாளுமன்றத்தின் நோக்கமாகும்.

மேலும், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து இளைஞர்களிடையே பிரபலப்படுத்துவதும்பங்கேற்பு மற்றும் பேச்சுவார்த்தையின் மூலம் ஜனநாயக உணர்வை அவர்களிடையே விதைப்பதும் தேசிய இளைஞர் நாடாளுமன்ற திருவிழாவின் நோக்கங்களாகும்.

 மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1804373

                           *********************

 



(Release ID: 1804554) Visitor Counter : 219