இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேசப் பெண்கள் தினத்தை முன்னிட்டு, பாட்னாவில் உள்ள மகளிர் பள்ளி மாணவிகளுடன், பாரலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் யோகேஷ் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 08 MAR 2022 4:10PM by PIB Chennai

பாரலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளிப்  பதக்கம் வென்ற யோகேஷ் காதுனியா,  பாட்னாவில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு இன்று சென்று  மாணவிகளுடன் கலந்துரையாடினார். ஒலிம்பிக் மற்றும் பாரலிம்பிக் போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரர்கள், தங்கள் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளைச்  சந்தித்து விளையாட்டு, சரிவகித உணவு, உடல் தகுதி ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனப்  பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். அதன்படி ஒலிம்பிக், பாராலிம்பிக் வீரர்கள் நாடு முழுவதும்  பள்ளிகளுக்குச்  சென்று மாணவ, மாணவியருடன் கலந்துரையாடி வருகின்றனர்.

யோகேஷ் தனது குழந்தை பருவத்தில் மாற்றுத்திறனாளியாக இருந்தபோது, அவரைக்  குணப்படுத்துவதில் அவரது தாய் முக்கியப்  பங்காற்றினார்.  இதனால் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களுக்கு அவர் மகளிர் தின வாழ்த்துக்களைத்  தெரிவித்தார். ‘‘ஆரம்பம் முதல் தனது தாய் தனக்கு உதவியாக இருந்தார் என்றும், இந்தப்  பெண்கள் தினத்தை நான் அவருக்காகச்  சமர்ப்பிக்கிறேன்’’ என யோகேஷ் கூறினார். 

பின்னர் தனது பாராலிம்பிக் அனுபவம் குறித்து பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக விளையாட்டு வீரர்களைச்  சந்திக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியை ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கி வைத்தார்.

************

 


(வெளியீட்டு அடையாள எண்: 1804102) வருகையாளர் எண்ணிக்கை : 182
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Kannada