உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து சிறப்பு சிவில் விமானங்கள் மூலம் 410 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்

प्रविष्टि तिथि: 08 MAR 2022 4:54PM by PIB Chennai

உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்பதற்கான ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம், இன்று 410 இந்தியர்கள் 2 சிறப்பு சிவில் விமானங்கள் மூலம் சுசீவாவிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். இத்துடன் சுமார் 18,000 இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம், கடந்த மாதம் 22-ந் தேதியிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். 75 சிறப்பு சிவில் விமானங்கள் மூலம் 15,521 பேரும், இந்திய விமானப்படையின் 12 விமானங்கள் மூலம் 2,467 பயணிகளும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.  இது தவிர இந்திய விமானப்படை விமானங்கள் 32 டன்னுக்கும் மேற்பட்ட நிவாரணப் பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளன.

  சிவில் விமானங்களில், 21 விமானங்கள் புக்காரஸ்டிலிருந்து 4575 பயணிகளையும், சுசீவாவிலிருந்து 9 விமானங்கள் 1820 பயணிகளையும், புடாபெஸ்டிலிருந்து 28 விமானங்கள் 5571 பேரையும், கோசிசிலிருந்து 5 விமானங்கள் 909 பேரையும், செசோவாவிலிருந்து 11 விமானங்கள் 2404 பேரையும், கிவ்விலிருந்து 1 விமானம் 2042 பேரையும் அழைத்து வந்துள்ளன.

***************


(रिलीज़ आईडी: 1804029) आगंतुक पटल : 173
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , Punjabi , Urdu , हिन्दी , Manipuri , Gujarati , Odia , Telugu