திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

ஸ்டார்ட் அப் கிராமத் தொழில்முனைவோர் திட்டத்தை அமல்படுத்துவதற்காக ஊரக வளர்ச்சி அமைச்சகத்துடன் தேசிய தொழில்முனைவோர் மற்றும் சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது

Posted On: 07 MAR 2022 10:23AM by PIB Chennai

ஸ்டார்ட் அப் கிராமத் தொழில்முனைவோர் திட்டத்தின் மூலம்  தொழில்முனைவோரை ஊக்கப்படுத்துவதற்கான நீடித்த நவீன முறையை வடிவமைக்க திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான தேசிய தொழில்முனைவோர் சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம், ஊரக வளர்ச்சி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

கிராமங்களில் வேளாண்மை  அல்லாத துறைகளில், தொழில்முனைபவர்களுக்கு ஆதரவு அளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் ஊரகப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தொழில் வாய்ப்பை அமைத்துக் கொடுப்பதுடன் அவர்கள் நிலையான தரத்தை அடையும் வரை முழு ஆதரவும் அளிக்க முடியும்.

இந்தக் கூட்டாண்மை மூலம் ஊரகப் பகுதிகளில் உள்ள  தொழில்முனைவோர் அவர்கள் தொழில் தொடங்க நிதி ஆதரவை பெறுவதற்காக வங்கிகளை அணுக இயலும். மேலும் முத்ரா வங்கியின் உதவியையும் பெறமுடியும்.

இது குறித்துப் பேசிய   மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகச்  செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால், இந்தியர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை அளிப்பவர்களாக இருக்க வேண்டும்  என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளதைச்  சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும், பெருமளவிலான வேலைவாய்ப்புக்கும் ஊரக தொழில்முனைவோர் பெரும் பங்காற்ற  முடியும் என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1803474

*****



(Release ID: 1803583) Visitor Counter : 208