பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஐரோப்பிய கவுன்சில் அதிபர் திரு சார்லஸ் மிச்செல் ஆகியோர் இடையிலான தொலைபேசி உரையாடல்

प्रविष्टि तिथि: 01 MAR 2022 10:55PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி ஐரோப்பிய கவுன்சில் அதிபர் திரு சார்லஸ் மிச்செலை தொலைபேசியில் இன்று தொடர்பு கொண்டு பேசினார்.

உக்ரைனில் தற்போது நிலவும் சூழல் குறித்து கவலை தெரிவித்த பிரதமர், உக்ரைனில் நடைபெற்று வரும் வன்முறையை கைவிட்டு, போர் நிறுத்தத்தை மேற்கொண்டு பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டுமென்ற இந்தியாவின் தொடர் வேண்டுகோளை வெளியிட்டார். அனைத்து நாடுகளில் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு மதிப்பு கொடுக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருந்துகள் உட்பட, அவசர நிவாரன உதவிகளை வழங்க இந்தியா மேற்கொண்டுவரும் முயற்சிகள் குறித்தும்  பிரதமர் விளக்கினார்.

***


(रिलीज़ आईडी: 1802333) आगंतुक पटल : 237
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam