பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

துறை சார்ந்த ஏலங்களுக்குப் பதிலாக பொதுவான மின்-ஏல சாளரத்தின் மூலம் நிலக்கரி நிறுவனங்கள் நிலக்கரியை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 26 FEB 2022 2:02PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கீழ்க்கண்டவற்றுக்கு இன்று ஒப்புதல் அளித்தது:

i.  கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) / சிங்கரேணி கோலியரீஸ் கம்பெனி லிமிடெட் (எஸ்சிசிஎல்) ஆகியவற்றின் மின்-ஏல சாளரத்தின் மூலம் நிலக்கரி நிறுவனங்களால் இணைக்கப்படாத அனைத்து நிலக்கரியையும் வழங்குதல். மின் துறை மற்றும் வணிகர்கள் உட்பட ஒழுங்குபடுத்தப்படாத துறைக்கு இந்த மின்-ஏலம் சேவையாற்றும்.

ii.  நிலக்கரி இணைப்புத் தேவைகளை சிஐஎல் மற்றும் எஸ்சிசிஎல் நிறுவனங்கள் பூர்த்தி செய்வதை பொறுத்து இது அமையும். மின்சாரம் மற்றும் மின்சாரம் அல்லாத நுகர்வோருக்கான தற்போதைய இணைப்புகளை இது பாதிக்காது.

iii. ஒற்றை மின்-ஏல சாளரத்தின் மூலம் வழங்கப்படும் நிலக்கரி ரயில் மூலம் எடுத்து செல்லக்கூடியதாக இருக்க வேண்டும். இருப்பினும், நிலக்கரி நிறுவனங்களுக்கு கூடுதல் கட்டணங்கள் அல்லது தள்ளுபடிகள் எதுவும் செலுத்தாமல், நுகர்வோர் தங்கள் விருப்பத்தைப் பொறுத்து, சாலை முறை/பிற முறைகள் மூலமும் நிலக்கரியை எடுத்து செல்லலாம்.

iv. சிஐஎல்/எஸ்சிசிஎல் மூலம் நீண்ட கால நிலக்கரி ஒதுக்கீடு, நிலக்கரி நிறுவனத்தால் தீர்மானிக்கப்படும் விலையில், தற்போதுள்ள நிலக்கரி இணைப்புகளுக்கான விநியோகங்களை பாதிக்காமல், சொந்த எரிவாயு ஆலைகளுக்கு அனுமதிக்கப்படும். இருப்பினும், மின் துறைக்கான நிலக்கரியின் அறிவிக்கப்பட்ட விலையில் வரிகள், ராயல்டி போன்றவை நிலக்கரி நிறுவனங்களால் செலுத்தப்படும்.

வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சாத்தியம் உட்பட முக்கியத்  தாக்கங்கள்:

சந்தைச் சிதைவுகள் அகற்றப்பட்டு, அனைத்து நுகர்வோருக்கும் ஒரே விலை மின்-ஏல சந்தையில் உருவாகும். செயல்பாட்டுத் திறனை இது அதிகரிப்பதோடு உள்நாட்டு நிலக்கரித்  தேவையை அதிகரிக்க வழிவகுக்கும். மேலும், நிலக்கரி நிறுவனங்கள் தங்கள் சொந்தச்  சுரங்கங்களில் இருந்து நிலக்கரியைப் பெறுவதன் மூலம் நிலக்கரி எரிவாயு நிலையங்களை நிறுவ முடியும். நாட்டில் சுத்தமான நிலக்கரி தொழில்நுட்பத்தை மேம்படுத்த இது உதவும்.

பொருளாதாரத்தின் அனைத்து நுகர்வோருக்கும் ஒரே விகிதத்தில் ஒரே மின்-ஏல சாளரத்தின் கீழ் நிலக்கரி வழங்குவதன் மூலம் சந்தைச்  சிதைவுகள்  அகற்றப்படுவதால் அதிக நுகர்வோர் உள்நாட்டு நிலக்கரியை நோக்கி ஈர்க்கப்படுவர். இதனால், உள்நாட்டு நிலக்கரித்  தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023-24க்குள் 1 பில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் எதிர்காலத்திற்கான லட்சிய நிலக்கரி உற்பத்தித் திட்டங்களையும் சிஐஎல் கொண்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியைச் சார்ந்திருப்பதைக் குறைத்து தற்சார்பு இந்தியாவை உருவாக்க இது உதவும்.

நிலக்கரி வாயுமயமாக்கல் தொழில்நுட்பத்தின் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை இந்த நடவடிக்கை உறுதி செய்யும். நிலக்கரி வாயுவாக்கம் போன்ற சுத்தமான நிலக்கரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது நிலக்கரி பயன்பாட்டின் பாதகமான சுற்றுச்சூழல் தாக்கங்களைக் குறைக்கும்.

நிதித்  தாக்கங்கள்:

நிலக்கரி நிறுவனங்களுக்கு மின்-ஏல சாளரங்களை இணைப்பது கூடுதல் செலவை ஏற்படுத்தாது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1801324

***********



(Release ID: 1801437) Visitor Counter : 203