தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிராட்பாண்ட் இணைப்பு கிராமங்களில் வசதியை மட்டும் வழங்காமல், திறமையான இளைஞர்களை உருவாக்கும்: பிரதமர் நரேந்திர மோடி

Posted On: 23 FEB 2022 5:10PM by PIB Chennai

ஊரக பகுதிகளில் டிஜிட்டல் இணைப்பை ஏற்படுத்துவது வெறும் ஆசை மட்டும் அல்ல, அது அவசிய தேவையாக மாறியுள்ளது என பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நிதிநிலை அறிக்கைக்கு பிந்தைய இணைய கருத்தரங்கில், குடிமக்களில் ஒருவரைக் கூட பின்தங்க விடாமல் இருப்பது என்ற கருப்பொருளில், பிரதமர் மோடி உரையாற்றினார்.  நிதிநிலை அறிக்கையின் நேர்மறையான பாதிப்பை எடுத்துரைப்பதில் தொழில்துறை தலைவர்கள், கொள்கைகளை உருவாக்குபவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை ஒன்றிணைப்பது, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ளவர்களை மேம்படுத்துவதற்கு இணைந்து பணியாற்ற துறை ரீதியான யுக்திகளை அடையாளம் காண்பது   இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். 

இந்நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோதி பேசியதாவது:

பிராட்பாண்ட் இணைப்பு கிராமங்களில் வசதியை ஏற்படுத்துவதோடு,  அங்கு பொருளாதாரத்தில் திறமையான இளைஞர்கள் உருவாவதை அதிகரிக்கும். பிராட்பாண்ட் இணைப்பால், சேவை துறைகள்  கிராமங்களை சென்றடையும் மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவிக்க உதவும்.

இதுபோன்ற இணைப்புகளை பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வை பரப்பி, கிராமங்கள் தனது இலக்கை எட்டுவதற்கு ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்த வேண்டும்.

தொலை தொடர்பு துறைக்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் உத்வேகம் அளிக்கப்பட்டுள்ளது. இத்துறையின் ஆண்டு வசூலில் 5 சதவீதம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமங்களில் மலிவான கட்டணத்தில் பிராட்பாண்ட் மற்றும் செல்போன் சேவைகள் வழங்குவதற்கான தீர்வுகள் காணப்படும். மேலும், 2025ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களிலும் கண்ணாடியிழை நார் கேபிள் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறினார்.

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800560

*********


(Release ID: 1800652) Visitor Counter : 184