பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தராகண்டின் சம்பாவாட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்


உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கருணைத்தொகையை அறிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 22 FEB 2022 12:32PM by PIB Chennai

உத்தராகண்டின் சம்பாவாட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில்  உயிரிழந்தோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத்தொகையையும், பிரதமர் அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலக ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

“உத்தராகண்ட் மாநிலம் சம்பாவாட்டில் ஏற்பட்ட விபத்து  இதயத்தை உலுக்குகிறது. இதில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நான் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். உள்ளூர் நிர்வாகம் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது: பிரதமர்"

“உத்தராகண்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோரின்  குடும்பங்களுக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் கருணைத் தொகையைப் பிரதமர் @narendramodi அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்கள் ரூ.50,000 பெறுவார்கள்.”

**************


(रिलीज़ आईडी: 1800246) आगंतुक पटल : 237
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam