திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பட்ஜெட்டுக்குப் பிந்தைய கருத்தரங்கு: வலுவான தொழில்துறையை வளர்ப்பது-திறன் இணைப்பு

Posted On: 20 FEB 2022 12:46PM by PIB Chennai

2022-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில்  கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் விரிவாக்கத்திற்கு உதவிடும் வகையில், தரமான கல்வித்  திறன் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் திறனுக்கான சூழல் அமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் சரியான கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முன்முயற்சிகளைத்  திறம்படச்  செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்க, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் (எம்எஸ்டிஇ)  கல்வி அமைச்சகம் ஆகியவை, பிற  அமைச்சகங்களுடன் இணைந்து, வரும் 21 பிப்ரவரி 2022 திங்கட்கிழமை பிற்பகல் 12:15 மணி முதல் 2:15 மணி வரை ‘வலுவான தொழில்துறை-திறன் இணைப்பை வளர்ப்பதை நோக்கி' என்ற கருப்பொருளில் திறன் இந்தியா கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இணைய வழிக் கருத்தரங்கில்அரசு அதிகாரிகள், தொழில்துறை  வல்லுநர்கள் மற்றும் முக்கிய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இந்த கருத்தரங்கு, பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்படும் கருத்தரங்குகளின் ஒரு பகுதியாகும். 'டிஜிட்டல் பல்கலைக்கழகம்: அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வி அணுகலை உருவாக்குதல்' என்ற கருப்பொருளில்  முதல் இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி  உரையாற்றுகிறார்.

 

இந்த இணையவழிக் கருத்தரங்கிற்கு   சுற்றுலா அமைச்சகத்தின் செயலாளர் திரு அரவிந்த் சிங், திறம் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சக  செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால் மற்றும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக வளர்ச்சித் துறையின் செயலாளர் திரு அனுராக் ஜெயின் ஆகியோர் இணைந்து தலைமை தாங்குகின்றனர்.

இந்த கருத்தரங்கிற்கான குழுவில் தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (NCVET) தலைவர்,திரு  என்.எஸ் கல்சி, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு  அம்பர் துபே மற்றும் டீம்லீஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் திரு  மணீஷ் சபர்வால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த அமர்வை தேசிய திறன் மேம்பாட்டு நிறுவன  முதன்மைத் தலைமை அதிகாரி  திரு. வேத் மணி திவாரி நடத்துவார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1799791


(Release ID: 1799865) Visitor Counter : 220