எரிசக்தி அமைச்சகம்

நாடு முழுவதும் பொது மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றி நிலையங்களின் கட்டமைப்பை இந்திய அரசு மேலும் விரிவுபடுத்தவுள்ளது

Posted On: 19 FEB 2022 9:13AM by PIB Chennai

மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றி நிலையங்களின் கட்டமைப்புகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகளை திருத்தி அமைத்து ஜனவரி 14, 2022-ம் ஆண்டு மத்திய மின்சாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாட்டில் மின்சார வாகனங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் இந்திய சந்தையில் மின்சார வாகனங்கள் பிரபலமாகி வருகின்றன.

 இந்தியாவில் மொத்தம் 1,640 மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றி நிலையங்கள் உள்ளன. இதில் சூரத், புனே, அகமதாபாத், பெங்களூரு, ஐதராபாத், தில்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை ஆகிய 9 நகரங்களில் மட்டும் 940 மின்னேற்றி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த 9 பெரு நகரங்களில் மேலும் மின்னேற்றி நிலையங்கள் அமைப்பதற்கு அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்த நகரங்களில் 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை கூடுதலாக 678 பொது மின்னேற்றி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 இதற்கிடையே நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் 22,000 மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக எண்ணெய் சந்தை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

***************(Release ID: 1799607) Visitor Counter : 302