வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செயல்பாட்டில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்கள்

Posted On: 11 FEB 2022 3:37PM by PIB Chennai

நாட்டில் தற்போது முறைப்படி ஒப்புதல் பெறப்பட்ட 425 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன. அறிவிக்கப்பட்ட 376 மண்டலங்களில் இன்றைய நிலவரப்படி 268 மண்டலங்கள் செயல்பாட்டில் உள்ளன.  சிறப்பு பொருளாதார மண்டலங்கள் முக்கியமாக தனியார் முதலீட்டின் அடிப்படையில் இயங்கும் முன் முயற்சியாகும். சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்து செயல்படுத்துவது பல்வேறு காரணங்களால் தாமதமாகிறது. உலக பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் உருவான மோசமான தொழில் சூழல், நிதி ஊக்குவிப்பில் மாற்றங்கள் போன்ற பல்வேறு காரணங்கள் தாமதத்திற்கு காரணமாக அமைகின்றன.

சிறப்பு பொருளாதார மண்டல சட்டம் 2005-ல் பிரிவு 30-ன் கீழ், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இருந்து உள்நாட்டு கட்டணப் பகுதிக்கு பொருட்கள் மாற்றப்படும் போது சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும். பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் போது சுங்க கட்டண சட்டம் 1975-ன் கீழ் தீர்வை வசூலிக்கப்படும்.

 மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா பட்டேல் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

***************


(Release ID: 1797614)