பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

ஸ்வாமித்வா திட்டத்தின் நிலை: தமிழ்நாடு குறித்த விவரங்கள்

Posted On: 09 FEB 2022 3:31PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் திரு. கபில் மோரேஷ்வர் படீல் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

 

கிராமப்புற பகுதிகளில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆய்வு செய்து வரைபடமிடுதலுக்கான மத்திய திட்டமான ஸ்வாமித்வா, 2020-21-ம் நிதியாண்டில் தொடங்கப்பட்டது. கிராமங்களில் உள்ள வீடுகளின் உரிமையாளர்களுக்கு சொத்து அட்டைகள்/ஆவணங்கள் வழங்குவதன் மூலம் சொத்துக்கான உரிமையை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

பஞ்சாயத்துராஜ் அமைச்சகம், இந்திய ஆய்வு அமைப்பு, மாநில வருவாய் துறை, மாநில பஞ்சாயத்துராஜ் துறை, மற்றும் தேசிய தகவல் மையம் ஆகியவை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன. இத்திட்டத்திற்காக இதுவரை 29 மாநிலங்கள் சர்வே ஆஃப் இந்தியா எனப்படும் இந்திய ஆய்வு அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

 

நாடு முழுவதும் 103,644 கிராமங்களில் ட்ரோன் விமானங்கள் இயக்கப்பட்டு, 28,072 கிராமங்களில்   36,56,173 எண்ணிக்கையிலான சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

 

தமிழ்நாட்டில் 2 கிராமங்களிலும், புதுச்சேரியில் 19 கிராமங்களிலும் இத்திட்டத்தின் கீழ் ட்ரோன் விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796817

                                                                                ***************

 



(Release ID: 1796995) Visitor Counter : 182