பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெருந்தொற்று நிலைமையை ஆய்வு செய்த பின்னர், முழு அளவிலான பணியாளர்களோடு அலுவலகங்கள் நாளை முதல் இயங்கும்: டாக்டர் ஜிதேந்திர சிங்

प्रविष्टि तिथि: 06 FEB 2022 7:16PM by PIB Chennai

பெருந்தொற்று நிலைமையை இன்று ஆய்வு செய்த பின்னர், குறைந்து வரும் கொவிட் பாதிப்புகளின் எண்ணிக்கை மற்றும் குறைந்து வரும் தொற்று உறுதிப்படுத்தல் விகிதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு முழு அளவிலான பணியாளர்களோடு அலுவலகங்கள் நாளை முதல் இயங்கும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று மாலை கூறினார்.

 

2022 பிப்ரவரி 7 முதல் அனைத்து மட்டங்களில் உள்ள அலுவலர்களும் எந்த விதிவிலக்கும் இல்லாமல் அலுவலகங்களுக்கு நேரில் வரவேண்டும் என்று அவர் கூறினார்.

 

அனைத்துப் பணியாளர்களும் அனைத்து நேரங்களிலும் முக கவசங்கள் அணிந்திருப்பதையும் சரியான கொவிட் நடைமுறைகளை பின்பற்றுவதையும் துறையின் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

 

பிப்ரவரி 15 வரை 50 சதவீத பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என்று இதற்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய அறிவிப்பின்படி, 2022 பிப்ரவரி 7 முதல் வீட்டில் இருந்து பணிபுரியும் வாய்ப்பு எந்த பணியாளருக்கும் வழங்கப்படாது.

 

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: 

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795988

 

****


(रिलीज़ आईडी: 1795993) आगंतुक पटल : 306
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Telugu