நிதி அமைச்சகம்

இந்தியா மற்றும் இதர நாடுகளுக்கு மிகப் பெரும் பாதகமான அம்சமாக பருவநிலை மாறுதலின் காரணிகள் அமைந்துள்ளன

அதிகத் திறனுடைய சூரிய மின்உற்பத்தி கலன்களை தயாரிப்பதற்கு உற்பத்தியோடு இணைந்த ஊக்க நடவடிக்கைக்காக ரூ.19,500 கோடி கூடுதலான ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டு உள்ளது

புதிய வர்த்தக வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகளுக்காக உற்பத்தி திறனை அதிகரிக்க சுழற்சி பொருளாதார முறை அறிமுகம்

அனல்மின் நிலையங்களில் 5 முதல் 7 சதவிகிதம் வரை உயிரிக்கழிவு வில்லைகள் பயன்படுத்த முன்மொழிவு, 38 மில்லியன் மெட்ரிக் டன் கரியமில வாயு வெளியேற்றம் குறையும் என எதிர்பார்ப்பு

கலவை எரிவாயு மற்றும் நிலக்கரியை வேதிப்பொருட்களாக மாற்றுதல் ஆகியவற்றுக்கான 4 முன்னோடித் திட்டங்கள் நிர்மாணிக்கப்படும்.

Posted On: 01 FEB 2022 1:14PM by PIB Chennai

அமிர்த காலத்தில் எரிபொருள் இடைமாற்றம் மற்றும் பருவநிலை மாறுதலை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை மேம்படுத்த அரசு குறிக்கோளுடன் உள்ளது.  பட்ஜெட் 2022-23ஆனது இந்தக் குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது.

எரிசக்தி இடைமாற்றம் மற்றும் பருவநிலை மாறுதலை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள்

இந்தியா மற்றும் இதர நாடுகளுக்கு மிகப் பெரும் பாதகமான அம்சமாக பருவநிலை மாறுதலின் காரணிகள் அமைந்துள்ளன என்று தனது பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்து உள்ளார்.

சூரிய எரிசக்தி


அதிகத் திறனுடைய சூரிய மின்உற்பத்தி கலன்களை தயாரிப்பதற்கு உற்பத்தியோடு இணைந்த ஊக்க நடவடிக்கைக்காக ரூ.19,500 கோடி கூடுதலாக ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.  2030க்குள் சூரிய எரிசக்தியில் 280 ஜிடபிள்யூ நிறுவுதிறன் என்ற இலக்கை அடைய தேவைப்படும் உள்நாட்டு உற்பத்தியை இது நிறைவு செய்யும்.

சுழற்சி முறை பொருளாதாரம்

புதிய வர்த்தக வாய்ப்புகள்  மற்றும் வேலைவாய்ப்புகளுக்காக உற்பத்தி திறனை சுழற்சி பொருளாதார முறை அதிகரிக்கும் என்று குறிப்பிட்ட நிதியமைச்சர்  உள்கட்டமைப்பு வசதி, போக்குவரத்து, தொழில்நுட்ப தரநிலையை உயர்த்துதல், முறைசாரா அமைப்புடன் ஒருங்கிணைத்தல் போன்ற வளர்ச்சிக்கு அத்தியாவசியமான முக்கிய பிரச்சனைகள் குறித்தும் எடுத்துரைத்துள்ளார்.

 

கார்பன் இல்லாத பொருளாதாரத்திற்கு இடைமாற்றம்


அனல்மின் நிலையங்களில் 5 முதல் 7 சதவிகிதம் வரை உயிரிக்கழிவு வில்லைகள் பயன்படுத்த முன்மொழிவு, 38 மில்லியன் மெட்ரிக் டன் கரியமில வாயு வெளியேற்றம் குறையும் என எதிர்பார்ப்படுகிறது. மிகப் பெரிய வர்த்தகக் கட்டிடங்களில் எரிபொருள் சேவை கம்பெனி என்ற வர்த்தக மாதிரியை நிறுவுவதன் மூலம் எரிபொருளை திறம்படவும் சிக்கனமாகவும் பயன்படுத்த முடியும்.

 

 

********



(Release ID: 1794389) Visitor Counter : 248