நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கூட்டுறவு சங்கங்களுக்கான மாற்றுமுறை குறைந்தபட்ச வரி விகிதம் 15 சதவீதமாகவும், கூடுதல் வரி விகிதம் 7 சதவீதமாகவும் இருக்கும்

Posted On: 01 FEB 2022 1:05PM by PIB Chennai

கூட்டுறவு சங்கங்களுக்கான மாற்றுமுறை குறைந்தபட்ச வரி விகிதம் தற்போதைய  18.5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.  அதேபோல் கூட்டுறவு சங்கங்களுக்கான கூடுதல் வரி விகிதம் தற்போதைய 12 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த குறைக்கப்பட்ட வரி விகிதங்கள் ஒரு கோடி முதல் 10 கோடி வரையிலான கூட்டுறவு சங்கங்களுக்கு மட்டுமே பொருந்தும்.  இந்த வரிக் குறைப்பு நடவடிக்கை, கிராமப்புறங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க உதவும். 

பொருளாதார வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும் புதிய தொழில் நிறுவனங்களை பதிவு செய்து கொள்வதற்கான கால அவகாசம்  2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படும். 

புதிய தொழில் நிறுவனங்கள் பதிவு செய்த தேதியிலிருந்து 10 ஆண்டுகளில்   3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து வரி ஊக்கத் தொகை வழங்கப்படும். 

புதிதாக பதிவு செய்யப்படும் சில குறிப்பிட்ட உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்களுடன் போட்டியிடும் சூழலை உருவாக்கும் வகையில் 15 சதவீத சலுகை வரி விதிப்பை அரசு அறிமுகம் செய்யும்.

சோதனை மற்றும் ஆய்வு நடவடிக்கையின் போது, கண்டுபிடிக்கப்படும், கணக்கில் காட்டப்படாத வருமானத்திலிருந்து வர்த்தக நஷ்டங்களை ஈடுகட்ட அனுமதிக்கப்படமாட்டாது.  இத்தகைய நடவடிக்கைகள் மூலம் வரி ஏய்ப்பு நடவடிக்கைகள் குறைக்கப்படும்.

******


(Release ID: 1794347) Visitor Counter : 351