நிதி அமைச்சகம்

நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகத்தின் மூலம் வர்த்தகம் புரிவதை எளிமையாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் - நிதியமைச்சர்

Posted On: 01 FEB 2022 1:16PM by PIB Chennai

நாடாளுமன்றத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகத்தின் மூலம் வர்த்தகம் புரிவதை எளிமையாக்குவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மனித வளம், முதலீடுகள் ஆகியவற்றை ஆக்கப்பூர்வமான முறையில் திறம்பட பயன்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

தகவல் தொழில்நுட்பங்கள் மூலம் மத்திய – மாநில அரசுகள் இடையேயான நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்படும்.

தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான நில ஆவண மேலாண்மைத் திட்டத்தின்கீழ் தனித்துவ நிலங்களுக்கான அடையாள எண் வழங்கப்படும். 

பாதுகாப்புத் துறையில் மூலதன கொள்முதலுக்கான பட்ஜெட்டில் 68 சதவீதம் வரை உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்ய பயன்படுத்தப்படும். 

ராணுவத்திற்கு தேவையான உபகரணங்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் தனியார் துறையும்  இணைந்து செயல்படுவது ஊக்குவிக்கப்படும்.

***************



(Release ID: 1794297) Visitor Counter : 238