நிதி அமைச்சகம்
கோவிட் 19 ஏற்படுத்திய அதிர்ச்சியையும் மீறி வேளாண் துறை 2021-22-ல் 3.9%-ம் 2020-21-ல் 3.6%-ம் வளர்ச்சி அடைந்துள்ளது
Posted On:
31 JAN 2022 3:01PM by PIB Chennai
மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில், நாட்டின் மொத்த மதிப்புக் கூட்டு நடவடிக்கையில் 18.8 சதவீத பங்களிப்பைக் கொண்ட வேளாண் துறை, கடந்த இரண்டாண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதிய அளவுக்கு பெய்த பருவமழை, கடனுதவி கிடைப்பதையும், முதலீடுகளை அதிகரித்து, சந்தை வாய்ப்புகளை உருவாக்கி, கட்டமைப்பு வளர்ச்சியை மேம்படுத்தி, தரமான இடுபொருட்கள் வழங்கவும், அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் பலன் அளித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அபரிமிதமான வளர்ச்சி அடைந்ததும், வேளாண் துறை செயல்பாடு மேம்பட உதவியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுப் பயிர் சாகுபடித் திட்டம், தண்ணீர் சேமிப்பு மற்றும் தன்னிறைவுக்கு வழிவகுத்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வேளாண் உற்பத்திக்கு, பாரதிய இயற்கை வேளாண் சாகுபடித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சமையல் எண்ணெய் உற்பத்தி, 2015-16-ல் இருந்ததை விட, 2020-21-ல் ஏறத்தாழ 43 சதவீதம் அதிகரித்துள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, 2021-22-ல் 1,052 லட்சம் டன்னுக்கும் மேற்பட்ட உணவு தானியங்கள் மத்திய அரசால் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 59 லட்சம் ஹெக்டேருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் நுண்ணீர் பாசன வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
***************
(Release ID: 1793969)
Visitor Counter : 277