நிதி அமைச்சகம்

2021-ம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையிலான நிதி பற்றாக்குறை, முந்தைய இரு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் வெகுவாக குறைந்துள்ளது

Posted On: 31 JAN 2022 2:56PM by PIB Chennai

பெருந்தொற்று பாதிப்பின் பின்னணியில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், தொழில்துறையினருக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட அரசின் பல்வேறு நடவடிக்கைகளின் பலன்கள் தெரியத் தொடங்கியிருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  2020-21-ம் ஆண்டில் சுகாதாரம் தொடர்பான கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நிலையில் பல்வேறு துறை சார்ந்த நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட  முதலீட்டு செலவினங்கள்,  சாதகமான பொருளாதார சூழலை உருவாக்கி உள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையிலான கால கட்டத்தில் அரசின் வருவாய் இன வரவுகள் 67.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

 நாட்டின் மொத்த வரி வருவாய்  50 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை  பதிவு செய்துள்ளது.

மூலதன செலவினங்கள் 13.5 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.

நிதிப் பற்றாக்குறை, பட்ஜெட் மதிப்பீட்டில் 46.2 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார மீட்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அரசின் கடன் அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட்டில் இடம் பெறாத பல்வேறு அம்சங்கள், பட்ஜெட் ஒதுக்கீடுகளுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் மூலதன செலவினங்கள் 67 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

***************



(Release ID: 1793907) Visitor Counter : 501