ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நைபர் ஆராய்ச்சி தளத்தை டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்

प्रविष्टि तिथि: 28 JAN 2022 2:46PM by PIB Chennai

தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (நைபர்) ஆராய்ச்சி இணையதளத்தை மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று தொடங்கி வைத்தார்.

 

மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் இணை அமைச்சர் திரு பகவந்த் குபா, நித்தி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால் ஆகியோர் நிகழ்ச்சியின் போது உடனிருந்தனர்.

 

அனைத்து நைபர்கள் மற்றும் அவற்றின் ஆராய்ச்சி நடவடிக்கைகள், காப்புரிமைகள் தாக்கல் செய்தல் உள்ளிட்ட தகவல்களைத்  தொழில்துறை மற்றும் பிற பங்குதாரர்கள் அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் இத்தளம் உருவாக்கப்பட்டது.

 

பாதுகாப்பு, விவசாயம், விஞ்ஞானம் மற்றும் ஆராய்ச்சித்  துறைகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அளிக்கும் முக்கியத்துவம் குறித்து பேசிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் முக்கியமான தூண்களில் ஒன்றாகும் என்றார்.

 

தொழில்துறை மற்றும் கல்வித்துறை ஆகிய இரண்டிலும் ஆரோக்கியமான போட்டியின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சர், மருந்துத் துறையின் நீடித்த வளர்ச்சிக்கு ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் அவசியம் என்று வலியுறுத்தினார்.

 

இன்று தொடங்கப்பட்ட தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி இணையதளத்தை http://nipermis.pharmaceuticals.gov.in/ எனும் முகவரியில் காணலாம்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1793268

                                ***************


(रिलीज़ आईडी: 1793387) आगंतुक पटल : 231
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali