சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நாட்டில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 164.35 கோடியை கடந்தது
प्रविष्टि तिथि:
27 JAN 2022 8:04PM by PIB Chennai
நாட்டில் குறிப்பிடத்தக்க சாதனையாக, தகுதியானவர்களில் 95 சதவீதம் பேருக்கு கோவிட் முதல் தவணை ஊசி செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 164.35 (1,64,35,41,869) கோடியை இன்று கடந்தது. இன்று மாலை 7 மணி வரை 49 லட்சத்துக்கும் மேற்பட்ட (49,69,805) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அடையாளம் காணப்பட்ட பயனாளிகள் 1 கோடிக்கும் மேற்பட்டோருக்கு (1,03,04,847) முன்னெச்சரிக்கை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.
தகுதியான பயனாளிகளில் 95 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைத்ததற்காக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1793056
*********************
(रिलीज़ आईडी: 1793072)
आगंतुक पटल : 276