மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
மின்னணு உற்பத்திக்கான தொலைநோக்கு ஆவணத்தின் இரண்டாம் தொகுதியை மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியீடு
Posted On:
24 JAN 2022 5:02PM by PIB Chennai
"2026-க்குள் $300 பில்லியன் நிலையான மின்னணு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி" என்ற தலைப்பில் மின்னணு துறைக்கான 5 ஆண்டு செயல்திட்ட வரைபடம் மற்றும் இலக்குகள் ஆவணத்தை இந்திய செல்லுலர் மற்றும் மின்னணு சங்கத்துடன் இணைந்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இன்று வெளியிட்டது.
இரண்டு பகுதி தொலைநோக்கு ஆவணத்தின் இரண்டாவது தொகுதி இதுவாகும். "இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியை அதிகரித்தல் மற்றும் சர்வதேச மதிப்புச் சங்கிலிகளின் பங்கு" என்ற தலைப்பில் நவம்பர் 2021-ல் முதல் தொகுதி வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், ஆவணங்கள் மற்றும் கொள்கைக் கட்டமைப்பு சார்ந்த பொருட்களை குறிப்பிடத்தக்க வேகத்தில் வெளிக்கொணரும் முயற்சிகளுக்காக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒட்டுமொத்தக் குழுவையும் பாராட்டினார்.
சமீபத்திய உரையாடல் ஒன்றின் போது தொழில்துறை தலைவர்கள் அவரிடம் எழுப்பிய சில விஷயங்களையும் இந்த நிகழ்வின் போது அமைச்சர் எடுத்துரைத்தார். கைபேசித் தயாரிப்பு விதிமுறைகள் குறித்த தொழில்துறையினரின் அச்சங்களுக்கு பதிலளித்த அமைச்சர், கைபேசி உற்பத்தி ஒழுங்குமுறை மாற்றமின்றி அப்படியே இருக்கும் என்றும் தெளிவுபடுத்தினார்.
உலகப் பொருளாதார மன்றத்தில் பிரதமர் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் மின்னணுவியல் துறையை விரிவுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துவதில் அமைச்சகம் கவனம் செலுத்துகிறது என்று மின்னணு, தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைதல் துறை இணை அமைச்சர் தி .ராஜீவ் சந்திரசேகர் கூறினார். மதிப்புச் சங்கிலிகளில் நம்பகமான பங்குதாரராக இந்தியா உருவாகி வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792189
*********
(Release ID: 1792230)