குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
துபாய் உலக கண்காட்சி 2020 எம்எஸ்எம்இ அரங்கை மத்திய அமைச்சர் திரு நாராயண் ரானேயும், இணை அமைச்சர் திரு பானு பிரசாத் சிங் வர்மாவும் தொடங்கி வைத்து காதி இந்தியா திரைப்படத்தை வெளியிட்டனர்
Posted On:
17 JAN 2022 1:11PM by PIB Chennai
துபாய் உலக கண்காட்சி 2020-ல், துபாய் அரசின் அதிகாரிகள் மற்றும் நாடு முழுவதிலுமிருந்து இணைந்த பிரமுகர்கள் முன்னிலையில், மத்திய எம்எஸ்எம்இ அமைச்சர் திரு நாராயண் ரானே, எம்எஸ்எம்இ இணை அமைச்சர் திரு பானு பிரசாத் சிங் வர்மா ஆகியோர், எம்எஸ்எம்இ செயலர் திரு பி பி ஸ்வெயின், காதி கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் திரு வினய் குமார் சக்சேனா ஆகியோருடன் எம்எஸ்எம்இ அரங்கினை இணையம் வழியாக இன்று தொடங்கி வைத்தனர். சர்வதேச கண்காட்சிகள் குழுவின் மூலம் நடத்தப்படும் துபாய் உலக கண்காட்சி 2020 என்பது “மனங்களை இணைத்து, எதிர்காலத்தை உருவாக்குவதல்” என்ற மையப் பொருளுடன், உலகின் மிகச் சிறந்த கண்காட்சியில், லட்சக்கணக்கான மக்களை ஓரிடத்தில் கொண்டு வருவது, மனித அறிவையும், சாதனையையும் கொண்டாடுவது என்பதை நோக்கமாகக் கொண்டது. இந்தக் கண்காட்சியில் எம்எஸ்எம்இ-யின் பங்கேற்பு இந்தியாவின் எம்எஸ்எம்இ நிலைமை பற்றி புரிதலை உருவாக்க உதவும் என்பதோடு உலகம் முழுவதும் உள்ள சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ள உதவும் வகையில், பல்வேறு நாடுகள் வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்களுடன், கலந்துரையாடவும் வகை செய்யும்.
காதி கிராமத் தொழில்கள் ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட காதி இந்தியா திரைப்படத்தையும் மத்திய அமைச்சர் வெளியிட்டார். தொடக்க நிகழ்வில் உரையாற்றிய திரு ரானே, வேலைவாய்ப்பை உருவாக்குதல், பொருள்கள் உற்பத்தியின் அடித்தளத்தை விரிவாக்குதல், ஆகியவற்றில் எம்எஸ்எம்இ முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது 11 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் 6 கோடிக்கும் அதிகமான நிறுவனங்களை இது கொண்டுள்ளது. மேலும், ஜிடிபி-க்கு 30 சதவீதத்திற்கு அதிகமாகவும் இந்தியாவிலிருந்து ஒட்டுமொத்த ஏற்றுமதியில், 48 சதவீதத்திற்கு அதிகமாகவும் பங்களிப்பு செய்து பொருளாதார வளர்ச்சியில், குறிப்பிடத்தக்க பங்காளியாக இது உள்ளது. ஏற்றுமதி, பொருட்களின் தரம், ஜிடிபி-க்கு பங்களிப்பு, இந்தியாவில் செயல்படும் அனைத்து எம்எஸ்எம்இ-க்களுக்கும் உலகத் தரத்திலான கட்டமைப்பையும், நவீன தொழல்நுட்பத்தையும் வழங்குதல் ஆகியவற்றில் புதிய உச்சங்களைத் தொடுவதன் மூலம், நாடு முழுவதும் எம்எஸ்எம்இ-க்களுக்கான முத்திரையைப் பதிப்பது அமைச்சகத்தின் குறிக்கோளாகும் என்றார்.
***************
(Release ID: 1790487)
Visitor Counter : 228