தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொலை தொடர்பு சீர்திருத்தங்கள் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Posted On: 12 JAN 2022 4:41PM by PIB Chennai

கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி அறிவிக்கப்பட்ட தொலை தொடர்பு சீர்திருத்தங்களின்படி, சில தொலை தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்து வேண்டிய சில நிலுவைத் தொகைகளை பங்குகளாக செலுத்தும் விஷயம் குறித்து பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. 

பங்குகளை பெறுவதற்காக எந்த  தொலை தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு அரசு பணம் செலுத்துகிறதா

இல்லை. தொலை தொடர்பு நிறுவனங்களின் பங்குகளை பெறுவதற்கு அரசு எந்த பணமும் செலுத்தவில்லை. கடந்த 2021 செப்டம்பர் 15ம் தேதி அறிவிக்கப்பட்ட தொலை தொடர்பு சீர்திருத்தங்களின்படி தொலை தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய குறிப்பிட்ட நிலுவைத் தொகைகள் அவர்களின் விருப்பப்படி பங்குகளாகவும் /  மூலதனமாகவும் மாற்றப்படுகின்றன.

 3 நிறுவனங்களில் பங்குகள் எவ்வாறு பெறப்படுகின்றன?

தொலை தொடர்பு துறை நீண்ட கால வழக்கை சந்தித்து வருகிறது.  இதன் காரணமாக, பல சட்ட விஷயங்களில் தொலை தொடர்பு நிறுவனங்கள் அதிகளவிலான தொகையை செலுத்த வேண்டியுள்ளது. இந்த சட்ட விவகாரங்கள், இந்திய தொலை தொடர்பு துறையை நெருக்கடிக்கு ஆளாக்குகின்றன.

நமது சமூகத்துக்கு தொலை தொடர்புத்துறை மிக முக்கியமானது. அதனால், பல சீர்திருத்தங்களுக்கு 2021 செப்டம்பரில் அரசு ஒப்புதல் வழங்கியது.

இந்த சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, தொலை தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய சில வட்டி தொகைகளை அரசுக்கு பங்குகளாக அளிக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

சில நிறுவனங்கள் இந்த வாய்ப்பை தேர்ந்தெடுக்கவில்லை. 3 நிறுவனங்கள் மட்டும் இந்த வாய்ப்பை தேர்ந்தெடுத்தன.

அரசு தகுந்த நேரத்தில் இந்த பங்குகளை விற்று தனக்கு  சேர வேண்டிய தொகையை பெறும்.

பங்குகளை அரசு பெறுவதன் மூலம் இந்த 3 நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களாகுமா?

இல்லை. இந்த நிறுவனங்கள் பொதுத் துறை நிறுவனங்களாக மாறாது.   இந்த 3 நிறுவனங்களும் தொடர்ந்து தனியார் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும்.

 

தொலை தொடர்பு தொழில் மற்றும் சாமானியர்கள்  மீது இதன் தாக்கம் என்னவாக இருக்கும்

தொலை தொடர்பு தொழில்  ஆரோக்கியமாகவும், போட்டி போடும் விதத்திலும் இருக்க வேண்டும். பெருந்தொற்று போன்ற நேரத்தில், அரசின் சீர்திருத்தங்கள் மற்றும் ஆதரவு மூலம் இந்த நிறுவனங்களால் தங்கள் தொழிலை தொடர்ந்து மேற்கொள்ள முடியும்.

இது சந்தையில் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே இருப்பதை தடுத்து நிறுத்தும்.  போட்டி குறைவாக இருப்பது, அதிக கட்டணத்துக்கும், மோசமான சேவைக்கும் வழிவகுக்கும்.  சந்தையில் போதிய போட்டிகள் நிலவுவது, சாதாரண மக்களின் நலனை பாதுகாக்கும்.

செலுத்த வேண்டிய கடன் தொகையை பங்குகளாக மாற்றுவதன் மூலம், இந்த துறையால் முதலீடு செய்யவும், சிறந்த சேவைகள் அளிக்கும்  திறனை மீண்டும் பெற முடியும்.  தொலை தொடர்பு சேவைகள் தொலை தூர பகுதிகளுக்கும் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தை புதுப்பிக்க தேசிய ஜனநாயக கூட்டணி அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது?

எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் தொழில்நுட்பங்களை மேம்படுத்த அனுமதிக்கப்படாததால் முன்பு பலவீனமாக இருந்தன. இதன் காரணமாக இந்த 2 பொதுத்துறை நிறுவனங்களும், சந்தையில் பங்கு பதிப்பை இழந்து சுமார் 59,000 கோடி கடனை சந்தித்தன.

இந்த பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து நீடிப்பதை உறுதி செய்ய அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது.  பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை புதுப்பிக்கவும், வளரச் செய்யவும், ரூ.70,000 கோடி மதிப்பிலான நிதியுதவி திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்தது.

அரசின் முயற்சிகளால், இந்திய 4ஜி, 5ஜி தொழில்நுட்பங்கள் ஏற்பட்டன. 4ஜி-யின் இறுதி கட்டத்தில் பிஎஸ்என்எல் உள்ளது.  4ஜி அலைக்கற்றையை பெறுவதற்கு பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு அரசு நிதி ஒதுக்கியுள்ளது.  இந்த நடவடிக்கைகள், அதிக போட்டி சூழலில் பிஎஸ்என்எல் நிறுவனம் தாக்குப்பிடிக்கச் செய்தது. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அதிவேக இணையதள சேவை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு அரசு உதவி வருகிறது.

முந்தைய அரசு போல் இல்லாமல், ஏழைகளின் வீடுகளுக்கு மலிவான கட்டணத்தில் தொலை தொடர்பு சேவை கிடைப்பதை உறுதி செய்ய, தற்போதைய அரசு வெளிப்படையாக செயலாற்றிக் கொண்டிருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1789377

*************

 


(Release ID: 1789469) Visitor Counter : 238