குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுச்சேரியில் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மையத்தைத் தொடங்கி வைத்தார் பிரதமர்

प्रविष्टि तिथि: 12 JAN 2022 5:12PM by PIB Chennai

புதுச்சேரியில் தேசிய இளையோர் விழாவைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது, புதுச்சேரியில்  ரூ.122 கோடி முதலீட்டில் 10 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள எம்எஸ்எம்இ அமைச்சகத்தின் தொழில்நுட்ப மையத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த மையத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும். 200 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்பட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்குத் தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் உதவிகள் அளிக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் திரு அனுராக் சிங் தாக்கூர், திரு நாராயண் ரானே, திரு பானு பிரதாப் சிங் வர்மா, திரு நிதிஷ் ப்ரமாணிக், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி முதலமைச்சர் திரு என் ரங்கசாமி, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1789390

 

***************


(रिलीज़ आईडी: 1789435) आगंतुक पटल : 292
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Telugu