திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
உலக பாரம்பரிய மையத்தின் இணையதளத்தில் இந்தி விளக்கங்களை சேர்க்க உலக இந்தி தினத்தன்று யுனெஸ்கோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு
இடுகை இடப்பட்ட நாள்:
11 JAN 2022 5:01PM by PIB Chennai
சர்வதேச கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பிற்கான (யுனெஸ்கோ) இந்தியாவின் நிரந்தர தூதுக்குழு, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய மைய இணையதளத்தில் இந்திய பாரம்பரிய தளங்கள் குறித்த இந்தி விளக்கங்களை சேர்க்க ஒப்புக்கொண்டதாக நேற்று அறிவித்தது. உலக இந்தி தினத்தை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் திரு. தர்மேந்திர ப்ரதான் டிவிட்டர் பதிவு ஒன்றின் வாயிலாக இந்த முடிவை வரவேற்றுள்ளார்.
ஒவ்வொரு இந்தியருக்கும், இந்தி ஆர்வலர்களுக்கும் பெருமை சேர்ப்பதாக இந்தி திகழ்கிறது என்று அவர் கூறினார். உலக அரங்கில் இந்திய மொழிகளின் புகழ் ஊக்கமளிக்கும் வகையில் வளர்ந்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1789127
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1789158)
வருகையாளர் எண்ணிக்கை : 212