வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தப் பருவத்தில் அமெரிக்காவுக்கு இந்திய மாம்பழங்கள் ஏற்றுமதிக்கான ஒப்புதலை மத்திய அரசு பெற்றுள்ளது

Posted On: 11 JAN 2022 4:36PM by PIB Chennai

புதிய பருவ காலத்தில் இந்திய மாம்பழங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்காவின் வேளாண் துறை ஒப்புதலை மத்திய அரசு பெற்றுள்ளது. அமெரிக்க நுகர்வோர் இப்போது இந்தியாவின் மிக உயர்ந்த தரமுள்ள மாம்பழங்களைப் பெறவுள்ளனர்.

கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக சர்வதேச பயணங்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் கதிர்வீச்சு இன்மை குறித்து  ஆய்வு செய்ய அமெரிக்கப் பரிசோதகர்கள் இந்தியாவுக்கு பயணம் செய்ய இயலாமல் போனது. இதனால் 2020-ல் இருந்து  இந்திய மாம்பழங்களை ஏற்றுமதி செய்ய அமெரிக்காவால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

2021 நவம்பர் 23 அன்று நடைபெற்ற 12-வது இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக கொள்கை அமைப்பின் கூட்டத்தைத் தொடர்ந்து திருத்தி அமைக்கப்பட்ட வேலைத் திட்டம் செயல்படத் தொடங்கியது. பின்னர் பரஸ்பர உடன்பாட்டின் ஒரு பகுதியாக மார்ச் மாதத்தில் இருந்து அல்ஃபோன்சா ரக மாம்பழங்களுடன் வரவிருக்கும் மாம்பழ பருவ காலத்தில் அமெரிக்காவுக்கு மாம்பழங்களை இந்தியா ஏற்றுமதி செய்ய முடிந்துள்ளது.

2019-20 பருவத்தில் அமெரிக்காவுக்கு 4.35 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 1,095 மெட்ரிக் டன் மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஏற்றுமதியாளர்களிடமிருந்து  கிடைக்கப் பெற்ற மதிப்பீடுகளின் படி 2022-ல் மாம்பழங்கள் ஏற்றுமதி 2019-20 அளவை விஞ்சக்கூடும்.

 அமெரிக்காவின் ஒப்புதலை அடுத்து பாரம்பரியமாக மாம்பழம் சாகுபடி செய்யும் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா பகுதிகளிலிருந்து ஏற்றுமதிக்கு வாய்ப்பு ஏற்படும். இதே  போல் 2022 ஏப்ரல் முதல் அமெரிக்காவுக்கு மாதுளை ஏற்றுமதி செய்யப்படும். இதே காலத்தில் அமெரிக்காவிலிருந்து செர்ரி பழங்களும் அல்ஃபல்ஃபா தீவனங்களும் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

************


(Release ID: 1789137) Visitor Counter : 418