இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
25-வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்
தேசிய இளைஞர் விழா, தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதோடு மட்டுமின்றி, இளைஞர்களிடையே மதநல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வை பரப்புகிறது
प्रविष्टि तिथि:
11 JAN 2022 4:08PM by PIB Chennai
புதுச்சேரியில் 12 ஜனவரி 2022, அன்று காலை 11 மணி அளவில், நடைபெறவுள்ள 25-வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கிவைக்கவுள்ளதாக மத்திய இளைஞர் நலத்துறை செயலாளர் திருமதி உஷா சர்மா, காணொலி வாயிலாக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் ஜனவரி 12-ம் தேதி தலைசிறந்த தத்துவஞானியும், சிந்தனையாளருமான சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் ஆண்டுதோறும் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை நாம் கொண்டாடும் வேளையில், அவரது போதனைகள் மற்றும் இளைஞர் சக்தியைப் பற்றிய அவரது அசையா நம்பிக்கைகள், இந்தியாவில் மாறி வரும் காலச்சூழலைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விழா இந்திய இளைஞர்களின் மனதை வடிவமைப்பதோடு அவர்களை தேச நிர்மாணத்திற்கான ஒருங்கிணைந்த சக்தியாக மாற்றியமைக்கும் என்றும் திருமதி உஷா சர்மா தெரிவித்தார்.
இந்த ஆண்டு கொவிட் தொற்றுச் சூழல் காரணமாக இந்த விழா 12–13 ஜனவரி 2022 காணொலி வாயிலாக நடைபெறவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1789114
***************
(रिलीज़ आईडी: 1789134)
आगंतुक पटल : 387