சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
திரு பூபேந்தர் யாதவும், திரு ஜான் கெர்ரியும் தொலைபேசி மூலம் பேச்சு நடத்தினர்
Posted On:
11 JAN 2022 12:17AM by PIB Chennai
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், பருவநிலைக்கான அமெரிக்க அதிபரின் சிறப்பு தூதர் திரு ஜான் கெர்ரியுடன் 2022 ஜனவரி 10 அன்று இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
பங்கேற்பாளர்கள் மாநாடு 26-ல் அறிவிக்கப்பட்ட இந்தியாவின் லட்சியமான பருவநிலை செயல் இலக்குகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விரிவாக இவர்கள் விவாதித்தனர். பருவநிலை லட்சியம், நிதி திரட்டுதல், ஏற்பு மற்றும் உறுதி, வன மேம்பாடு என அடையாளம் காணப்பட்ட நான்கு தூண்கள் மூலம் இந்தியா, அமெரிக்கா இடையே பருவநிலை செயல்பாடு மற்றும் நிதி திரட்டும் பேச்சு வார்த்தை ஆகியவற்றை முன்னெடுப்பது பற்றி இருதலைவர்களும் விவாதித்தனர்.
கிளாஸ்கோவில் பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்ட ஒற்றைச் சொல் இயக்கமான லைஃப் (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை-எல்ஐஎஃப்இ) மீது கவனம் செலுத்துவதன் தேவையையும், முக்கியத்துவத்தையும் திரு யாதவ் எடுத்துரைத்தார்.
நடைபெறவிருக்கும் மாபெரும் பொருளாதாரங்கள் அமைப்பின் கூட்டம் பற்றியும் இந்த தலைவர்கள் விவாதித்தனர்.
***************
(Release ID: 1789093)
Visitor Counter : 236