இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அதிதி அசோக் உள்ளிட்ட 5 கோல்ஃப் வீரர் வீராங்கனைகள் உட்பட மேலும் 10 தடகள வீரர்கள் டாப்ஸ் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்

Posted On: 10 JAN 2022 4:45PM by PIB Chennai

குதிரையேற்ற வீரர் ஃபவத் மிர்சா, கோல்ஃப் வீராங்கனைகள் அனிர்பான் லஹிரி, அதிதி அசோக், தீக்ஷா தாகர் மற்றும் ஆல்பைன் பனிச்சறுக்கு வீரர் முகமது ஹாரீப் கான் உள்ளிட்ட  10 தடகள வீரர்கள், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் ஒலிம்பிக் இயக்கக் குழுவால், ஒலிம்பிக் பதக்க மேடையில் இடம்பெறுவதற்கான ஒத்துழைப்பை வழங்குவதற்கான டாப்ஸ் (Target Olympic Podium Scheme) பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த ஐந்து தடகள வீரர் – வீராங்கனைகளும் முக்கிய பிரிவில் இடம்பெற்றுள்ள வேளையில் கோல்ஃப் வீரர்களான சுபாங்கர் ஷர்மா மற்றும் த்வேஷா மாலிக், ஜூடோகஸ் யஸ் கங்காஸ், உன்னதி ஷர்மா மற்றும் லிந்தோய் சனம்பம் ஆகியோர் வளர்ந்து வரும்  வீரர்கள் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  இவர்களையும் சேர்த்து முக்கிய பிரிவில் இடம்பெற்றுள்ள 107 பேர் உட்பட இதுவரை 301 தடகள வீரர்கள் டாப்ஸ் பட்டியலில்  சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடக்கத்தில், தலைசிறந்த தடகள வீரர்கள், வருடாந்திர பயிற்சி மற்றும் போட்டி  அட்டவணையில் இடம்பெறுவதற்கு சம்பந்தப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு அமைச்சகம் ஆதரவு அளித்து வந்தது. 

தற்போது, இந்த பட்டியலில் இடம்பெறாதவர்களும் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் சிறப்பாக விளையாட தங்களை தயார்படுத்திக் கொள்ள, டாப்ஸ் திட்டம் ஆதரவு அளிக்கிறது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788939

**************


(Release ID: 1788960) Visitor Counter : 198