பிரதமர் அலுவலகம்

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினத்தையொட்டி, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 09 JAN 2022 9:52AM by PIB Chennai

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினத்தையொட்டி, அனைவருக்கும் குறிப்பாக வெநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

‘’ வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினத்தையொட்டி, அனைவருக்கும் குறிப்பாக வெநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு வாழ்த்துக்கள். நமது வெளிநாட்டு இந்திய சமூகம் உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குவதுடன், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். அதேசமயம், அவர்கள் தங்கள் வேர்களுடன் ( சொந்த நாட்டுடன்) தொடர்பு வைத்துள்ளனர். அவர்களது சாதனைகள் குறித்து நாம் பெருமிதம் கொள்கிறோம்’’

****



(Release ID: 1788710) Visitor Counter : 165