ரெயில்வே அமைச்சகம்

14 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான மருத்துவ திரவ ஆக்சிஜனை கொவிட் சிகிச்சை மையங்களுக்கு ஏற்றிச் சென்றுள்ளது


வடக்கு ரயில்வேயில் 70%-க்கும் அதிகமான வழித்தட கிலோமீட்டர் மின்மயமாக்கப்பட்டுள்ளது

Posted On: 08 JAN 2022 1:12PM by PIB Chennai

வடக்கு ரயில்வேயால் இயக்கப்பட்ட 858 சிறப்பு சரக்கு ரயில்கள் பசுமை வழித்தடங்கள் மூலம் கடந்த ஆண்டு 14,403 டன் ஆக்சிஜனை க்ரையோஜெனிக் டேங்கர்களில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், தில்லி மாநில மருத்துவமனைகளுக்கும், கொவிட் சிகிச்சை மையங்களுக்கும் கொண்டுசென்றன.

உலகின் மிகப் பெரிய உணவுப் பாதுகாப்புத் திட்டமான  பிரதமரின் வறியோர் நல உணவுத் திட்டத்திற்கு உதவியாக 2021 ஏப்ரல் – டிசம்பர் மாதங்களுக்கு இடையே பல்வேறு மாநிலங்களுக்கு சாதனை அளவாக  26 மில்லியன் டன் உணவுத் தானியங்களை வடக்கு ரயில்வே ஏற்றிச் சென்றுள்ளது. இதே காலகட்டத்தில் சரக்குப் போக்குவரத்து மூலம் முன் எப்போதும் இல்லாத உயர் அளவாக 7,064 கோடி வருவாய் ஈட்டி, வடக்கு ரயில்வே  சாதனை படைத்துள்ளது. 

குஜராத்தில் புதிதாக கட்டப்பட்ட கெவாடியா ரயில் நிலையத்திற்கு ஹஸ்ரத் நிஜாமுதீன் மற்றும் வாரணாசியிலிருந்து ரயில்சேவைகளைப் பிரதமர் தொடங்கி வைத்தார். இது வடக்கு மாநிலங்களிலிருந்து ஒற்றுமைச் சிலைக்கு மக்கள் பயணம் செய்ய வசதியாக இருக்கிறது.

வடக்கு ரயில்வேயில் 70%-க்கும் அதிகமான வழித்தட கிலோமீட்டர் மின்மயமாக்கப்பட்டுள்ளது.

வடக்கு ரயில்வேயைச் சேர்ந்த 11 விளையாட்டு வீரர்களும், பயிற்சியாளர்களும் இந்திய அணியில் இடம் பெற்று டோக்கியோ  2020 ஒலிம்பிக் போட்டிகளுக்கு சென்றிருந்தனர். ஒலிம்பிக் போட்டிகளின் மல்யுத்தப் பிரிவில் திரு ரவிக்குமார் தஹியா வெள்ளிப் பதக்கமும், திரு பஜ்ரங் புனியா வெண்கலப்பதக்கமும் வென்றனர்.  பளு தூக்கும் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற திருமதி மீராபாய் சானுவின் பயிற்சியாளராக இருந்த  திரு விஜய் சர்மாவுக்கு ஓஎஸ்டி-யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788534

***************



(Release ID: 1788572) Visitor Counter : 209