சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட் அண்மைச் செய்திகள்
தமிழ்நாட்டில் 121 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
06 JAN 2022 9:23AM by PIB Chennai
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 148.67 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது.
இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,85,401
கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து, தற்போது 0.81 சதவீதமாக உள்ளது.
குணமடைந்தோர் விகிதம் தற்போது 97.81 சதவீதம்
கடந்த 24 மணி நேரத்தில் 19,206 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,43,41,009 என அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 90,928 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
தினசரி பாதிப்பு விகிதம் 6.43 சதவீதம் ஆகும்
வாராந்திர பாதிப்பு விகிதம் 3.47% ஆகும்.
இதுவரை மொத்தம் 68.53 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு, மஹாராஷ்ட்ரா, தில்லி, கேரளா, ராஜஸ்தான், குஜராத், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 24 மாநிலங்களில் கொவிட்-19- ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று 2630 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 995 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்/ அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் 797 பேருக்கும், தில்லியில் 465 பேருக்கும், தொற்று ஏற்பட்டு தில்லியில் 57 பேரும், மகாராஷ்டிராவில் 330 பேரும் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 121 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 110.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1787856
(रिलीज़ आईडी: 1787930)
आगंतुक पटल : 335