எரிசக்தி அமைச்சகம்

உஜாலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 36.78 கோடி எல்இடி விளக்குகள் விநியோகம்

Posted On: 05 JAN 2022 11:20AM by PIB Chennai

உஜாலா திட்டத்தின் கீழ் எல்இடி விளக்குகள் விநியோகம் மற்றும் விற்பனையின் 7 ஆண்டுகளை மின்சாரத்துறை அமைச்சகம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

குறைந்த செலவில் எல்இடி விளக்குகள் வழங்கும் உஜாலா திட்டத்தை பிரதமர் கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி தொடங்கி வைத்தார். குறுகிய காலத்தில் இது மிகப் பெரிய திட்டமாக மாறி, அதிகளவிலான மின்சார பயன்பாட்டை குறைத்தது.   தற்போது வரை, நாடு முழுவதும் 36.78 கோடி எல்இடி விளக்குககள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் வெற்றி, லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

உஜாலா திட்டம் ,ரூ.300 முதல் ரூ.350 வரை விற்கப்பட்ட எல்இடி விளக்குகளின் சில்லரை விற்பனை விலையை ரூ.70 முதல் 80 ஆக குறைத்து வெற்றி கண்டது. இத்திட்டம் மின்சாரத்தை அதிகளவில் சேமிக்க வழிவகுத்தது.  தற்போது வரை, ஆண்டுக்கு 47, 778 மில்லியன் கிலோவாட் மின்சாரம் சேமிக்கப்படுகிறது. அதோடு கார்பன் உமிழ்வும் 3.86 கோடி டன் குறைக்கப்பட்டது. 

உஜாலா திட்டத்தை அனைத்து மாநிலங்களும் உடனடியாக பின்பற்றின. இதன் மூலம் வீட்டு மின்சார கட்டணம் குறைந்தது. இதனால் நுகர்வோரின்  வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியதுடன், பணத்தையும் சேமிக்க முடிந்தது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1787594



(Release ID: 1787756) Visitor Counter : 374