நிதி அமைச்சகம்

2021-22 நிதியாண்டில் இதுவரை 65 லட்சத்திற்கும் அதிகமானோர் அடல் ஓய்வூதிய திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.

Posted On: 05 JAN 2022 3:08PM by PIB Chennai

அடல் ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து ஆறரை ஆண்டுகளில் 3.68 கோடி பதிவுகளுடன் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டி உள்ளது. 65 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்கள் பதிவு செய்துள்ளதால்இந்த நிதியாண்டில் இதன் செயல்திறன் சிறப்பாக உள்ளது.

இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும். ஆண் பெண் சந்தா விகிதம் 56:44 என்ற வகையில் மேம்பட்டு வருகிறதுநிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்து மதிப்பு சுமார் ரூ. 20,000 கோடி ஆகும்.

இந்திய அரசின் முதன்மையான சமூகப் பாதுகாப்புத் திட்டமான அடல் ஓய்வூதிய திட்டம்குறிப்பாக அமைப்புசாரா துறைகளில் உள்ள குடிமக்களுக்கு முதியோர் வருமானப் பாதுகாப்பை வழங்கும் நோக்கத்துடன்மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களால்  மே 9... 2015 அன்று தொடங்கப்பட்டது.

அடல் ஓய்வூதிய திட்டத்தை நிர்வகிக்கும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (பிஎஃப்ஆர்டிஏ) தலைவர் திரு. சுப்ரதிம் பந்தோபாத்யாய் கூறுகையில், “சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரை ஓய்வூதியத்தின் கீழ் கொண்டு வந்த இந்த சாதனைபொது மற்றும் தனியார் வங்கிகள்பிராந்திய கிராமப்புற வங்கிகள்கட்டண வங்கிகள்சிறு நிதி வங்கிகள்கூட்டுறவு வங்கிகள்அஞ்சல் துறை மற்றும் மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுக்கள் மூலம் வழங்கப்படும் ஆதரவு மற்றும் அயராத முயற்சியால் மட்டுமே சாத்தியமானது,” என்றார்.

மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1787650&RegID=3&LID=1

 

***************



(Release ID: 1787717) Visitor Counter : 201