வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 15 முதன்மையான கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்வி நிறுவனங்கள், ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் 75 நகர்ப்புற திட்டங்களை ஆவணப்படுத்த உள்ளன.

Posted On: 05 JAN 2022 1:09PM by PIB Chennai

75ஆம் ஆண்டு சுதந்திர கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மற்றும் தேசிய நகர்ப்புற விவகாரங்கள் நிறுவனம் இணைந்து ஸ்மார்ட் நகரங்கள்  - நடவடிக்கை மற்றும் ஆராய்ச்சியை நோக்கிய ஆய்வு (ஸார்) என்ற திட்டத்தை தொடங்கியுள்ளன. இந்த திட்டத்தின் கீழ்  அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 15 முதன்மையான கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்வி நிறுவனங்கள்ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் 75 நகர்ப்புற திட்டங்களை ஆவணப்படுத்த உள்ளன.

ஸ்மார்ட் நகரங்கள் திட்டம் மூலம் மேற்கொள்ளப்படும் முக்கிய திட்டங்களை இந்த நிறுவனங்கள் ஆவணப்படுத்தும். இதுசிறந்த நடைமுறைகளிலிருந்து பெறப்படும் பாடங்களை ஆவணப்படுத்தி மாணவர்களுக்கு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை வழங்கும். நகர்ப்புற வளர்ச்சி திட்ட பணியாளர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே நிகழ்நேர தகவல் பரிமாற்றத்தை இது உருவாக்கும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள 75 முக்கிய நகர்ப்புற திட்டங்களின் தொகுப்பை தயாரிப்பது ஸார்’ யின் கீழ் திட்டமிடப்பட்ட முதல் நடவடிக்கையாகும். இந்தத் துறையில் எதிர்கால ஆராய்ச்சிகளுக்கான முதல் புள்ளியாக இந்தத் தொகுப்பு செயல்படும். தொகுப்பில் உள்ள இந்த 75 திட்டங்கள் சென்னைகோவைஈரோடுதஞ்சாவூர்திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 47 ஸ்மார்ட் நகரங்களில் செயல்படுத்தப்படும் .

 

***



(Release ID: 1787716) Visitor Counter : 173